காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில், 15.04.2016. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகளைக் கொண்ட நிர்வாகக் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் தலைவராக அல்ஹாஜ் பீ.எம்.எம்.அபுல் காஸிம், செயலாளராக அல்ஹாஜ் எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோரும், 16 பேரைக் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக பள்ளியின் தலைவராக இருந்த அல்ஹாஜ் எஸ்.ஏ.முஹம்மத் அலீ, 29.02.2016. அன்று காலமானதையடுத்து, இப்பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
நஹ்வீ M.M.முத்துவாப்பா
(இமாம் - முஹ்யித்தீன் பள்ளி)
முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |