காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட - வெளிநாடு வாழ் காயலர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், வருடாந்திர ஜகாத் சந்தா நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை இல்லாமை, இயலாமை, கல்லாமை களைந்துயர்வோம் என்ற உன்னதக் குறிக்கோளில், தொடர்ந்து ஏழை, எளியோரின் தேவைக்காக பல்வேறு சேவைகளாற்றி வருகிறது.
இச்சிறப்பு மிக்க சேவைகளாற்றி வரும் பைத்துல்மாலுக்கு, அனுசரணையும், ஆலோசனையும் வழங்க, வெளிநாடு வாழ் காயலர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் பைத்துல்மால் செயலகத்தில் 22-07-2016 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
ஹாஜி மொகுதூம் முஹம்மது (சிங்கப்பூர்), ஹாஜி முஹம்மது நூஹீ (ரியாத்), ஹாஜி பஜீல் கரீம் (கத்தர்), ஹாஜி கிதுறு முஹம்மது ஹல்லாஜ் (ஹாங்காங்), ஹாஜி முஹம்மது இபுராகிம் (பஹ்ரைன்) ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
துவக்கமாக ஜனாப் ஹபீப் ரஹ்மான் ஆலிம் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். ஹாஜி பீ.எம்.டீ.ஹபீபு முஹம்மது, ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யது அபுதாஹிர், ஜனாப் எஸ்.எம்.அகமது சுலைமான், ஹாஜி வி.ஐ.புகாரீ ஆகியோர் பைத்துல்மால் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முறை பற்றி, விரிவாக எடுத்துரைத்தனர்.
பின்னர், வெளிநாடு வாழ் காயலர்கள் ஒவ்வொருவராக தங்களின் ஆலோசனைகளையும், பைத்துல்மாலுக்கு நிதி ஆதாரங்களை பெருக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றியும் கருத்துரைத்தனர்.
ஹாஜி ஏ.டபிள்யு.கிதுறு முஹம்மது ஹல்லாஜ் தனது கருத்துரையில், வருடாந்திர ஜகாத், சந்தாதாரர்கள் நிதி திட்டத்தை, அமுல் படுத்துமாறு கேட்டுக்கொண்டார். டிரஸ்டிகள் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். அதற்காக அத்திட்டத்தின் கிழ் ஹாஜி ஏ.ஆர்.அப்துல் வதூத் & சன்ஸ் சார்பில் ரூ.10000 மற்றும் ஹாஜி ஏ.டபிள்யு.ருக்னுதீன் ரூ.10000 மும் வழங்கினார்கள்.
மேலும் வருகை தந்திருந்த அனைத்து பெருமக்களிடமும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும்படி பைத்துல்மால் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அல்ஹாஜ் ஏ.எல்.இர்ஷாத் அலீ அவர்கள் நன்றி கூறினார்கள். துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|