வரும் உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், அனைத்து வார்டு உறுப்பினர்கள் பொறுப்பிடங்கள் உட்பட - மாவட்டத்தின் பல உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கு SDPI போட்டியிடும் என அதன் மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட கட்சியின் தேர்தல் நிலைப்பாடு மற்றும் அதற்கான வியூகம குறித்து ஆலோசனை கூட்டம் கடந்த 07/08/16 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாமுகைதீன் தலைமையிலான மாநில குழுவினருடன் SDPI கடசியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஷ்ரப் அலி. ஃபைஜி மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைகள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பகுதிகள் அதற்கான வரைமுறைகளை கட்சியின் மாநில குழுவினரின் அறிவுரைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது..
அதன்படி வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் SDPI கடசியின் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக முதற்கட்ட அறிவிப்பாக :
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருசில பகுதிகளின கவுன்சிலர் பதவிகளுக்கும், காயல்பட்டிணம் நகராட்சியில் தலைவர் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், ஸ்ரீவைகுண்டம் நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒருசில வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்கும் கடசியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்துவது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் அனைத்து கிளைகளிலும் தேர்தல் ஆயத்தப்பணிகள் நடைபெற்றுவருகிறது..
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |