காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியை நடத்தி வரும் துளிர் அறக்கட்டளையின் நிறுவன நாள் விழா, 26.07.2016. அன்று நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அதன் அலுவலக மேலாளர் சித்தி ரம்ஸான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
துளிரின் 18வது நிறுவன நாள் விழா ஜுலை 26 அன்று மாலை 3 மணியளவில் துளிரின் காணொளி கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துளிரின் செயலர் சேக்னா லெப்பை தலைமை வகித்தார். நிறுவாக கண்காணிப்பாளர் சித்திரம்ஜான் துளிரை காயல்பட்டிணத்தில் நிறுவனர் வக்கீல் அகமது அவர்கள் துவங்குவதர்க்கு அவர்கள் பங்கு கொண்ட ஹாங்ஹாங்க் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மறுவாழ்வு மாநாடு உந்து சக்தியாக இருந்ததையும் சிறப்பு குழந்தைகளுக்காக பள்ளி வட்டாரத்தில் இல்லாமல் இருந்ததையும் துளிர் துவங்கப்பட்டதன் அவசியத்தையும் எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஹாங்ஹாங்க் காயல் ஐக்கிய பேரவையின் தலைவர் எ.எல். இர்ஷாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உறையில் ஹாங்ஹாங்கில் செயல்படும் காயல் நல சங்கம் (காஸ்வா) துளிருக்கு கூடுதலாக வகுப்பறை கட்டி தர முதல் நிலை முடிவெடுத்ததாகவும் அது போல சிங்கபூர் காயல் நல மன்றமும் ஒரு வகுப்பு கட்ட முன் வந்ததாகவும் அதற்காக அந்த அமைப்புகள் பாராட்டுவதாகவும் தெரிவித்ததார். இதுபோல உலக காயல் நல மன்றங்களின் உதவிகளையும் கேட்டு பெற துளிர் நிர்வாகிகள் முயற்சிக்கலாம் எனவும் தெரிவித்தார். துளிர் காயல் ஐக்கிய பேரவைக்கு வேண்டுகோள் விடுத்தால் அதனை பரிசிலித்து தங்கள் வேண்டுகோளுக்கினங்கி இயன்ற உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்சிசியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காயல் ஐக்கிய பேரவை மன்றத்தின் முக்கிய நிர்வாகிஸ்தர் டீ. இஸ்மாயில் அவர்கள் பேசும் போது காயல்வாழ் இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் துளிரின் வருட தனவந்தர் நிதி செலுத்தி உள்ளனர் என்றும் மேலும் துளிருக்கு தொடர்ந்து அனுசரனையும் ஆலோசனையும் வழங்கிட ஹாங்ஹாங்கில் பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் அதுபோல பல நாடுகளிலும் இதுபோன்ற துளிரின் பிரதி நிதி குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் தெரிவித்தார் இந்த அனைத்து துளிரின் பிரதி நிதிகளையும் ஒன்றினைத்து ஒரு வாட்ஸ் அப் குடும்பம் அமைத்து அவ்வபோது துளிர் செய்திகளை பரிமாறி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் துளிர் சார்பில் பொன்நாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
துளிரின் மாற்றுதிறன் சிறார்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள், நாடகம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பும்இ பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. நன்றியுறையுடன் இந்நிகழ்ச்சி முடிவடைந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross