இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினம் 15.08.2016. திங்கட்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனிதநேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமுமுக ஹாங்காங் அமைப்பின் நிர்வாகி எம்.ஏ.ஹாஜா அரபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றினார்.
தமுமுக மாவட்டப் பொருளாளர் எம்.ஐ.ஏ.அப்துல் காதிர், மமக மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், ஐபீபீ மாவட்ட பொருளாளர் எச்.எம்.அப்துல் காதிர், தமுமுக / மமக நகர நிர்வாகிகளான ஐதுரூஸ், ஷம்சுத்தீன், எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம், ரஃபீக், மவ்ஜூத், அப்துர்ரஹீம் உட்பட திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.
|