காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், சென்னை க்ரவுன் அரிமா சங்கத்துடன் இணைந்து, 14.08.2016. ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மருத்துவ இலவச முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 110 பேர் பங்கேற்றுப் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, KCGC சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
KCGC (காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம்) மற்றும் சென்னை கிரவுன் அரிமா சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று 14-08-16 ஞாயிற்றுக் கிழமை சென்னை, திருவல்லிக்கேணி, காயிதேமில்லத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..
இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை, கண் மற்றும் பொது மருத்துவ ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் சுமார் 110 பயனாளிகள் பங்கு கொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த மருத்துவ முகாமில் , தேவை உள்ளோருக்கு இலவச மருந்துகள் மற்றும் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் உயர்திரு.இராதா கிருஷ்ணன் .IAS அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் அவர் நமது காயல்பட்டணம் மக்கள் செய்து வரும் தொண்டுகளை வெகுவாக பாராட்டினார்கள்.
இந்த மருத்துவ முகாமில் KCGC உறுப்பினர்களான
1.சகோ.M.M.அஹ்மது.
2.சகோ.பல்லாக் சுலைமான்.
3.சகோ.S.S.N.சதக்கதுல்லாஹ்.
4.சகோ.நெட்காம் புஹாரி.
5.சகோ.அட்வகேட் ஹசன் பைசல்.
6..சகோ.ஹசன் நெய்னா
7.சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ்.
8.சகோ.குளம் முஹம்மது தம்பி.
9.சகோ.கிதுர் முஹைதீன்.
ஆகியோர் கலந்து கொண்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
இந்த மருத்துவ முகாம் முடிவில் KCGC உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் கீழ்காணும் நபர்கள் கலந்து கொண்டார்கள்.
1.சகோ.M.M.அஹம்து.
2.சகோ.பல்லாக் சுலைமான்.
3.சகோ.S.S.N.சதக்கதுல்லாஹ்.
4.சகோ.நெட்காம் புஹாரி.
5.சகோ.அட்வகேட் ஹசன் பைசல்.
6..சகோ.ஹசன் நெய்னா
7.சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ்.
கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக காயல்பட்டணம் மக்கள் அனைவரும் எவ்வித வேற்றுமையும் கொள்ளாமல் KCGC யோடு இணைந்து அனைத்து வழிகாட்டல், மருத்துவ முகாம் மற்றும் பொதுவான செயல்பாடுகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் வகையில் உறுப்பினர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் மேலும் ஆண்டுக்கொருமுறை சென்னை மண்ணடியில் காயலர் சங்கமம் நடத்த வேண்டும் இதன் மூலம் காயலர்களுக்கிடையேயான நட்புறவு பெருகும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மருத்துவ முகாம் நடைபெற இடம் தந்த முஸ்லிம் பள்ளி நிர்வாகத்தினருக்கும் மற்றும் பண உதவியளித்தவர்களுக்கும் நன்றி அறிவித்து கூட்டம் நிறைவுபெற்றது.
இறுதியாக துவாவுடன் கூட்டம் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
KCGC சார்பாக...
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
|