இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினம் 15.08.2016. திங்கட்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் சுதந்திர நாள் விழா, அன்று காலை 09.00 மணியளவில் நடைபெற்றது.
பள்ளியின் துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் முன்னிலை வகித்தார். மாணவர் ஹாஃபிழ் எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ கிராஅத் ஓதினார். மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய, பள்ளியின் துணைத் தலைவர் எஸ்.எம்.உஸைர் தேசிய கொடியேற்றி வைக்க, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, கொடி வாழ்த்துப் பாடல், தேசிய பாடல், எல்.கே. நினைவுப் பாடல் ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் பாடினர்.
எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ஊமைத்துரை சாமுவேல் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், எல்.கே. மேனிலைப்பள்ளி , எல்.கே. துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
|