காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கோழிப் பண்ணை, பால் பண்ணை நடத்துவதற்கு கடன் வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்படும் என அந்நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு:-
பிஸ்மில்லாஹ்...
சிறுதொழில் செய்யும் நமது ஊரைச் சுர்ந்த மக்களை ஊக்குவிக்கும் முகமாக, கோழிப் பண்ணை, பால் வியாபாரம் செய்து வருவோருள், தங்களின் வியாபார அபிவிருத்திக்காக கடன் உதவி வேண்டி விண்ணப்பிப்போருக்கு, நமது காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை மூலமாக நிகழும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் வரை முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும்.
மற்ற வகையான கடன் உதவிகள் வழமை போல வழங்கப்படும்.
|