காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக துவக்கம் முதல் இருந்து வந்த ஹாஜி எம்.எம்.உவைஸ், 2013ஆம் ஆண்டு காலமானார்.
இவ்வாறிருக்க, ஐக்கியப் பேரவைக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக, 09.08.2016. அன்று பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், பல ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும் கலந்துகொள்ளாததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது ஒத்திவைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக,
(1) ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்,
(2) ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,
(3) ஹாஜி எல்.எம்.இ.கைலானீ,
(4) ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக்
ஆகியோரடங்கிய நால்வர் சமாதானக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
மேற்படி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சிறுநெய்னார் பள்ளியின் செயலாளருடன் இக்குழு, குழுவினருள் ஒருவரான ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன் முழு அசைபடப் பதிவை காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடுமாறு, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் செயலாளர் எம்.ஏ.மஹ்மூத் என்ற பட்டறை மஹ்மூத் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதனடிப்படையில், அக்கூட்டத்தின் அசைபடப் பதிவு இரண்டு பாகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி, அசைபடப் பதிவைக் காணலாம்:-
தகவல் & படம்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 08:57 / 24.08.2016.] |