இந்தியாவின் 70ஆவது சுதந்திர நாள் 15.08.2016. திங்கட்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சுதந்திர நாள் விழா, அன்று காலையில் நடைபெற்றது.
துவக்கப்பள்ளி நிகழ்ச்சிகள் 08.15 மணிக்குத் துவங்கின. பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி தலைமை தாங்கினார். வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, சென்ட்ரல் பள்ளிகளின் செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், எம்.ஏ.அப்துல் ஹக், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், வாவு எம்.எம்.உவைஸ், வி.ஐ.ஜெய்னுல் ஆப்தீன், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறை வணக்கப் பாடல், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் பாடினர். பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.ஜுனைதா ராணி வரவேற்புரையாற்றினார். எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ கொடியேற்றினார். பள்ளி மாணவர்கள் கொடி வாழ்த்துப் பாடல் பாடினர்.
ஏ.ஏ.பீர் முஹம்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் நிகழ்ச்சிகள் 08.30 மணிக்குத் துவங்கின. எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ தலைமை தாங்கினார். எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, சென்ட்ரல் பள்ளிகளின் செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், எம்.எல்.ஷேக்னா லெப்பை, எம்.ஏ.அப்துல் ஹக், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், வாவு எம்.எம்.உவைஸ், வி.ஐ.ஜெய்னுல் ஆப்தீன், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் முத்து அஹ்மத் அர்ஷத் கிராஅத் ஓத, இறைவணக்கம் - தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களைப் பள்ளி மாணவர்கள் பாடினர். பள்ளியின் தலைமையாசிரியர் எம்.கே.ஷெரீஃப் வரவேற்புரையாற்றினார்.
வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கொடி வாழ்த்துப் பாடல் பாடினர்.
பள்ளி ஆசிரியர் மவ்லவீ நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ப.செய்யித் அப்துல் காதிர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல்:
அ.பீர் முஹம்மத் உசேன்
படங்கள்:
தா.நியாஸ்
(ஆசிரியர்கள், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி)
|