காயல்பட்டினம் ஜாவியாவில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 152ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் 19.08.2016. அன்று துவங்கி 25.08.2016. வரை ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நாட்களில் அன்றாடம் 20.30 மணி முதல் 21.30 மணி வரை பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றன.
19.08.2016. அன்று, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ - “ஷாதுலிய்யா தரீக்காவின் ஷெய்குமார்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
20.08.2016. அன்று, “இஸ்லாம் கூறும் இறையச்சம்” எனும் தலைப்பில், அல்மக்தபத்துர் ராஸிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.மாமுனா லெப்பை காஷிஃபீ உரையாற்றினார்.
21.08.2016. அன்று, “இஸ்லாமிய இளைஞர்கள் - அன்றும், இன்றும்” எனும் தலைப்பில், தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.இம்தாதுல்லாஹ் ஃபாழில் பாக்கவீ உரையாற்றினார்.
22.08.2016. அன்று, “இறைநேசர்களின் மாண்புகள்” எனும் தலைப்பில், ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ ஃபாழில் தேவ்பந்தீ உரையாற்றினார்.
23.08.2016. அன்று, “பெற்றோரின் மாண்புகள்” எனும் தலைப்பில், அல்மக்தபத்துர் ராஸிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.தாஹா காஷிஃபீ உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, “கற்றோரை கண்ணியம் செய்வோம்” எனும் தலைப்பில், ஜாவியா அரபிக் கல்லூரியின் 07ஆம் ஆண்டு மாணவர் ஹாஃபிழ் எம்.எம்.முஹ்யித்தீன் அப்தல் காதிர் உரையாற்றினார்.
24.08.2016. அன்று, “அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்” எனும் தலைப்பில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரையாற்றினார்.
25.08.2016. கந்தூரி நாளன்று 09.00 மணிக்கு திக்ர் ஹல்காவும், அதனைத் தொடர்ந்து யவ்முல் இல்ம் - கல்வி நாள் நிகழ்ச்சியும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமையிலும், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ கலீஃபத்துல் குலஃபாயிஷ் ஷாதுலீ முன்னிலையிலும் நடைபெற்றது.
கல்லூரி மாணவர்கள் உரையைத் தொடர்ந்து, ஜாவியா அரபிக்கல்லூரி மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை & தாருஸ் ஸலாம் தஃவா சென்டர் ஆகியவற்றின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்டோர் மார்க்க உரைகளாற்றினர்.
அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் ஹல்கா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஷாதுலீய்யா தரீக்கா ஷெய்குமார்களின் சரித்திரங்கள் என்ற தலைப்பில், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, துஆ - ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
|