காயல்பட்டினத்தில் துணை வட்டாட்சியர் அலுவலகம் அமைய, உலக காயல் நல மன்றங்களின் துணையுடன் முயற்சிக்கப்படும் என, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
நமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் (Jakwa) மன்றத் தலைவர் அல்ஹாஜ் M.A.S. செய்யது அபு தாஹிர் அவர்கள் தலைமையில் ஹாஜி S.A. உவைஸ் அவர்கள் இல்லத்தில் 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. துணை தலைவர் S.M. தாஹிர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஃபிழ் S.M. ஷெய்கு அலி நுஸ்கி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். செயலாளர் ஹாஃபிழ் M.A. செய்யது முஹம்மது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைவர் அவர்களின் தலைமையுரைக்குப்பின் செயலாளர் அவர்கள் நமது அமைப்பின் மூலம் நமதூரில் கடந்த மூன்று மாதங்களாக நிறைவேற்றப்பட்ட பணிகளை (இக்ரா கல்வி சங்கம், ஷிஃபா ஹெல்த & வெல்பேர் டிரஸ்ட்,) விபரமாக உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் நமதூரின் முக்கிய தேவையான துணைதாசில்தார் அலுவலகம் அமைய நமது மன்றம் (ஜக்வா) முயற்சி செய்ய வேண்டும் என்றும் இதற்காக உலக காயல் நலமன்றங்கள் மற்றும் ஊரிலுள்ள அனைத்து பொது நல அமைப்புகளுக்கும் வேண்டுகோள் வைக்கலாம் என கோரிக்கை வைத்தார். வந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆமோதித்தனர்.
வருகை புரிந்த உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்கு பின் கீழ்காணும் தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. இன்ஷாஅல்லாஹ் வழமைபோல் இவ்வருடமும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நமது அமைப்பின் சார்பாக நமதூரைச் சேர்ந்த 25 நலிவுற்ற குடும்பங்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் 600/= மதிப்புடைய உணவுப் பொருட்கள் வழங்குவது.
2. நமது மண்ணின் மைந்தர் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் K.A.M. முஹம்மது அபுபக்கர் M.L.A அவர்கட்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.
3. நமதூரில் துணை தாசில்தார் அலுவலகம் அமைவதற்கு நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறைச்சார்ந்த அமைச்சர் ஆகியோருக்கு நமதூர் மக்களின் சார்பாக கோரிக்கை மனு அளிப்பது எனவும் இதற்காக நமதூரைச்சார்ந்த அனைத்து நலமன்றங்களிடமும் ஆதரவு திரட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
4. நமது மன்றத்தின் சார்பாக நமதூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து கால அட்டவைணையை புதுப்பிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜனாப் அலாவுதீன் அவர்கள் நன்றி நவில, அல்ஹாஃபிழ் அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்களின் துஆ ஸலவாத்து, கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜெய்ப்பூரிலிருந்து...
O.L காதர்
(பொருளாளர் - ஜக்வா, ஜெய்ப்பூர்.)
|