காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் ஒருங்கிணைப்பில்,
செப்டம்பர் 03ஆம் நாள் சனிக்கிழமையன்று, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2016” கலந்துரையாடல் & மாநில - நகர சாதனையாளர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளும்,
செப்டம்பர் 04ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, தம்மாம் - ரியாத் காயல் நல மன்றங்களுடன் இணைந்து, “விடியலை நோக்கி...” எனும் தலைப்பில் உயர் கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி, கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து, நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி ஆகியன நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள விபர அறிக்கை:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், இன்ஷாஅல்லாஹ் - வரும் செப்டம்பர் 03, 04 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில், கல்வி சிறப்பு நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடத்தப்படவுள்ளன.
செப்டம்பர் 03 - “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2016”:
செப்டம்பர் 03ஆம் நாள் சனிக்கிழமையன்று, மாலை 04.30 மணிக்கு, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2016” கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாநில சாதனை மாணவர்களுடன், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் கலந்துரையாடவுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மாலை 05.30 மணியளவில், மாநிலத்தின் முதன்மாணவர்களுக்கும், நமதூரிலிருந்து 10, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளை எழுதி பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இவ்விரு நிகழ்ச்சிகளும், தொடர்ந்து 11ஆவது ஆண்டாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 04 காலை - “விடியலை நோக்கி...” உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி:
செப்டம்பர் 04ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 09.30 மணியளவில், தம்மாம் - ரியாத் காயல் நல மன்றங்களுடன் இணைந்து, “விடியலை நோக்கி...” எனும் தலைப்பில் உயர் கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இதில், சென்னை எஸ்-ஐஏஎஸ்.அகடமியின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சே.மு.மு.முகமதலி - “விழி! எழு!! வெற்றிகொள்!!!” என்ற தலைப்பிலும், சென்னை ஏ.எம்.எஸ்.பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் முஹம்மத் ரஃபீக் - “அகில இந்திய நுழைவுத் தேர்வுகளும், உயர்கல்வி படிப்புகளும்” என்ற தலைப்பிலும், உயர்கல்வி - வேலைவாய்ப்பு உரைகளாற்றவுள்ளனர்.
செப்டம்பர் 04 மாலை - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி:
செப்டம்பர் 04 அன்று மாலை 04.30 மணிக்கு, கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து, காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான - Inter School Quiz Competition (KWAQ QUIZ) வினாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது.
இப்போட்டி, தொடர்ந்து 7ஆவது ஆண்டாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் - கல்வி ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறவும், வருங்காலங்களில் இறையருளால் சாதனைகள் பல புரிந்திட நமதூரின் மாணவ-மாணவியரை ஊக்குவிக்கவும் வருமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், தம்மாம் - ரியாத் - கத்தர் காயல் நல மன்றங்கள் சார்பாக...
காயல்பட்டினத்திலிருந்து...
A.தர்வேஷ் முஹம்மத்
(நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் & நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம்)
|