காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் கே.எம்.டீ. மருத்துவமனையின் வெள்ளி விழா 10.09.2016. சனிக்கிழமையன்று, மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்:-
வெள்ளி விழா நிகழ்ச்சிகள் அனைத்திலும், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு, மருத்துவமனை நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1. Re:...மலரும் நினைவுகள் posted bymackie noohuthambi (kayalpatnam )[03 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44582
காயல்பட்டினத்தில் ஒரு மருத்துவமனை எல்லா வசதிகளோடு அமைந்தால் பெண்களும் ஆண்களும் முதியவர்களும் குழந்தைகளும் இப்படி அவதிப்பட்டு இடித்துக் கொண்டு துவண்டு கொண்டு பேருந்துகளில் நெல்லை தூத்துக்குடி நாகர்கோவில் என்று அலையை தேவை இல்லையே என்று சிலர் கவலையுடன் இதய சுத்தியுடன் யோசித்தபோது அதற்கு அல்லாஹ் திறந்து விட்ட வழிதான் இன்று KMT வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடைபோடவைத்திருக்கிறது அல்ஹம்து லில்லாஹ்.
நாங்கள் அப்போது தம்மாமில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். KMT வரைபடத்தை எடுத்துக் கொண்டு வெள்ளிக் கிழமைகளில் எல்லா இடமும் சுற்றினோம். கடுமையான வெயில் காலம் அது. பெப்ஸியை குடித்துக் கொண்டு கிடைத்த உணவை உண்டு கொண்டு நமதூர் மக்களை சந்தித்தோம். குறைந்த பட்சம் 500 ரியல் ஒரு நபரிடம் வசூலிப்பது என்று தீர்மானித்தோம். ஆனால் 100 ரியல் கூட தர முடியாத நிலையில் இருந்தவர்களையும் சந்திக்க நேர்ந்த போதுதான் எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம். எவ்வளவு தந்தாலும் பெற்றுக் கொள்வது என்ற முடிவுடன் சென்றோம். சென்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு. குறைந்த பட்ச தொகை தந்தவர்களையும் நாங்கள் அன்புடன் அரவணைத்துக் கொண்டோம்.
KMT கால்கோள் விழாவுக்கு முதல் தவணையாக அரபகத்தில் இருந்து வந்த நிதி எங்களதுதான். அதற்கு நன்றி கடனாகத்தான் இன்றும் KMT பொது வார்டு அமைந்துள்ள இடத்தில்''காயல்நல மன்றம் தம்மாம்'' என்று ஒரு சலவைக்கல் இருப்பதை பார்க்கலாம். அதன்பிறகு தொடர்ந்து நிதிகள் குவிந்தன என்பது மேலதிகள் தகவல்.
அந்த மருத்துவமனையின் அறங்காவலர்கள் அயராத உழைப்பு தன்னலமற்ற சேவை உணர்வு தங்களுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அவர்கள் பதில் சொல்லாமல், ஆதாரமுள்ள நியாயமான குறைபாடுகளை களைவதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் , வெளிப்படையான நிர்வாகம் முதலியவை KMT யின் நம்பகத்தன்மைக்கு உரைகல்லாக அமைந்தது.
மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் செய்யும் சில சில தவறுகளுக்கு கூட நிர்வாகம் முகம் கொடுக்க வேண்டிய சூழ் நிலைகளும் அவ்வப்போது ஏற்பட்டது.
''அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை''
என்று வள்ளுவம் சொல்வது போல், இந்த நிர்வாகம் தனது பயணத்தை தொடர்ந்தது. இப்போது KMT யின் அருமை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல் வெளியூரில் சென்று காத்துக் கிடந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறவர்களுக்கு KMT ஒரு வர பிரசாதம்.
ஆனாலும் பயணங்கள் முடிவதில்லை அலைகள் ஓய்வதில்லை தேவைகள் நின்றுவிடுவதில்லை... கொக்கு பற பற... கோழி பற பற... மைனா பற பற... வானம்பாடி பற பற...என்று ஒரு கவிஞன் பாடுவது போல் இன்னும் மேலே மேலே உயர பறந்து உலகின் எல்லா மருத்துவ சேவைகளும் இந்த KMT யில் கிடைக்க நாம் எல்லோரும் அந்த நிர்வாகத்து உறுதுணையாக இருப்போம் என்று இந்த நாளில் சபதம் செய்து கொள்வோம்.
நிர்வாகம் மாறலாம் நிர்வாகிகள் மாறலாம் மருத்துவர்கள் வரலாம் போகலாம் ஆனாலும் KMT ஆல் போல் தழைத்து ஆறு போல் ஓடிக் கொண்டே இருக்கட்டும். என்று வாழ்த்துவோம். இதற்காக உதவுபவர்களுக்கும் உழைக்கும் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் செல்வ வளத்தையும் நீடித்த ஆயுளையும் கொடுத்தருள பிரார்த்திக்கிறோம்.
3. Re:... வாழ்த்துக்கள் posted byMOHAMMED RAFEEK KM (CALICUT)[06 September 2016] IP: 27.*.*.* India | Comment Reference Number: 44597
நமதூரில் நம் மக்களுடைய மருத்துவ தேவையை நிறைவேற்றவும், நம்மூர் மக்கள் சிறிய ஒரு நோய் நொடிக்குக்கூட வெளியூர் சென்று அவதிப்படுவதை பார்த்த நம்மூர் நலவிரும்பிகள் மற்றும் பெரியவர்களுடைய தியாகத்தினாலும், உழைப்பாலும் உருவானதே இந்த KMT மருத்துவ மனை.
இதை உருவாக்கியவர்கள் மிகப்பெரிய கனவுகளோடும், பல திட்டங்களோடும் தான் நிச்சியமாக உருவாக்கி இருந்திருப்பார்கள். அவர்கள் கண்ட கனவுகளும், அவர்கள் நினைத்த திட்டங்களும் முழுமையாக நிறைவேறவில்லை என்பது நாம் அனைவரும் கண்டுகொண்டிருக்கும் உண்மை.
இதற்கான குறைகளை நாம் ஆராய்ந்து குற்றங்களாகவும், தவறுகளாகவும் சொல்லிக்கொண்டு இருக்காமல் அதனை எவ்வாறு நிறைகளாக மாற்றலாம் என்ற முற்போக்கு சிந்தனையோடு நாம் (நிர்வாகிகள் & ஊர் மக்கள்) முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
நான் KTM தெருக்காரன் என்பதால் KMT உருவாவதற்கு முன்னரே அந்த வெற்று நிலத்தை அடிக்கடி பார்த்தவன். இன்று நம் கண் முன்னே அங்கே ஒரு அழகான ரம்மியமான சூழலில் ஒரு மருத்துவமனை அமைந்துள்ளதை பார்த்து சந்ததோசப்படும் காயல்வாசிகளில் நானும் ஒருவன்.
வெள்ளி விழா, வைர விழா என்பதெல்லாம் தோன்றிய நாட்களை அடையாளம் காட்டத்தான். வெற்றிவிழா என்னும் உண்மை விழா காண ஊர் மக்களாகிய நாம் நம்முடைய முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
மேலும் இந்த மருத்துவமனை எல்லா நவீன மருத்துவ வசதியும், நல்ல தலைசிறந்த மருத்துவர்களையும் பெற்று மருத்துவ சேவைகள் பல செய்ய நான் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். ஆமின்.
மனதார வாழ்த்தும் கோழிக்கோடு வாழ் காயலன்
முஹம்மது ரஃபீக்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross