காயல்பட்டினம் நகரின் 8 இடங்களில், காயல்பட்டினம் டெவலப்மெண்ட் ட்ரஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் சார்பில் சூரிய ஒளி - சோலார் மின் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.
25.08.2016. அன்று ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் அருகில் முதல் மின் விளக்கு ரிப்பன் வெட்டி இயக்கப்பட்டது. வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் அதைத் துவக்கி வைத்தார்.
பேருந்து நிலையம் அருகில் - பத்திரப் பதிவு அலுவலகம் எதிரில் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜியப்பா தைக்கா பள்ளி அருகில், பி.காம். செய்யித் அஹ்மத், மன்பஉல் பரக்காத் சங்கம் அருகில் - சித்தன் தெரு நெய்னார் தெரு சந்திப்பில் சாளை முஹம்மத் அப்துல் காதிர், அருணாச்சலபுரம் பள்ளிக்கூடம் அருகில் திருத்துவராஜ் & அஷ்ரஃப், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அருகில் ஐ.ஐ.எம். எதிரில், எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஓடக்கரை கோயில் அருகில் செல்வம், எல்.எஃப்.வீதி அருகில் விளக்கு அமீன் ஆகியோர் சோலார் மின் விளக்குகளை ரிப்பன் வெட்டி இயக்கத்தைத் துவக்கி வைத்தனர்.
தகவல்:
லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன்
|