சவூதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 96-ஆவது செயற்குழு கூட்டம் ஜித்தா – ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கத்தில் நடந்தேறியது. சென்ற ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெள்ளியன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் மன்றத்துணைத்தலைவர் சகோ.மருத்துவர் M.A.முஹம்மது ஜியாது தலைமையேற்க சகோ.எஸ்.ஐ.அப்துல் பாஸித் கிராஅத் ஓதிடவும், சகோ. S.A.செய்யிது இஸ்மாயில் (பார்மஸி) கலந்து கொண்ட அனைவரையும் அன்போடு வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
சமிபத்திய நோன்பு பெருநாள் விடுமுறையில் தாயகம் சென்றிருந்தபோது அங்கு காயலில் நடைபெற்ற ஷிஃபா மற்றும் இக்ரஃ கூட்டங்களில் கலந்து கொண்டு அதில் பரிமாறப்பட்ட பலவிதமான செய்திகளை மிகதெளிவாக எடுத்துக்கூறினார் சகோ. மருத்துவர் M.A.முஹம்மது ஜியாது.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தின் தீர்மானங்கள் , வழங்கப்பட்ட உதவிகள் மேலும் தாய்லாந்து காயல் நல மன்றத்தின் மேற்பார்வையில் நம்மன்றமும் காயல் இறை இல்லங்களில் இறைப்பணியாற்றும் இமாம்கள் முஅத்தீன்களுக்கு நோன்பு பெருநாளில் மொத்தம் 70-நபர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை உதவிகள் வழங்கியது இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் ஹஜ்ஜூப்பெருநாள் உதவிகள் திரும்ப வழங்கிட இருப்பதும் மற்றும் மன்றத்தின் இது நாள் வரையான செயல்பாடுகள் ,உதவிகள் அனைத்தையும் ரத்தினச்சுருக்கமாக தந்து அமர்ந்தார் மன்றச்செயலர் சகோ. சட்னி S.A.K.செய்யிது மீரான்.
மன்றத்தலைவர் உரை:
மன்றப்பணிகளுக்கு நம் மக்களின் பங்களிப்புகள் , நம் மன்றம் செய்த அளப்பரிய பணிகள், அதன் பயனால் நாம் பெற்ற பிராத்தனைகள், நாம் இன்னும் சிரமேற்கொண்டு இறை பொருத்தத்தை மட்டுமே நாடி பணிகளை முன்னெடுத்தால் நம் மன்றம் நிறையவே சாதிக்கலாம் என்றும், சந்தாக்களின் முக்கியத்துவம் பற்றியும், சில அழகிய அறிவுரைகளையும் எடுத்துக்கூறினார் மன்றத்தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
ஷிஃபா மற்றும் இக்ரஃ குறித்து கேட்கப்பட்ட ஐயங்களுக்கு ஜி.கா.ந.மன்றத்தின் ஷிஃபா பிரதிநிதி சகோ.சீனா மொகுதூம் முஹம்மது உரிய விளக்கங்கள் தந்தார். மேலும் தாம் தாயகத்திலிருந்த சமயம் பங்கு கொண்ட ஷிஃபா மற்றும் இக்ரஃ கூட்டங்கள் குறித்தும் விரிவான செய்திகளை பதிவு செய்தார். சகோ. M.M.S.ஷெய்க் அப்துல்காதிர் மன்றத்தின் நிதி நிலை விபரங்களை சமர்ப்பித்தார்.
கல்வி மற்றும் மருத்துவம் உதவிகள்:
கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் கோரும் பயனாளிகளின் மனுக்கள் வாசிக்கப்பட்டு முறையே உதவிகள் அறிவிக்கப்பட்டன.
மருத்துவம்: ஹிரணியா, கேன்சர், மூட்டு அறுவை, விபத்து போன்ற மருத்துவ
தேவைகளுக்கு உதவிகள் வழங்கி அவர்களின் நலனுக்காக பிரார்திக்கப்பட்டது.
கல்வி: பொறியியல், பிஸியோதெரபி, தொழிற்கல்வி போன்ற மேற்படிப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கி அவர்கள் வெற்றி பெற பிரார்திக்கப்பட்டது.
நன்றியுரை:
சகோ.சொளுக்கு எம்.ஐ.செய்யது முஹம்மது சாஹிப் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர்களாக பொதுக்குழு உறுப்பினர்களில் சிலர் கலந்தும் கூட்ட நிகழ்வுகளை ஆர்வமுடன் அவதானித்தனர்.
தீர்மானங்கள்:
1. நமதூர் மக்கள்களின் சொந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார பெருமக்கள்களை உரிய முறையில் எழுத்து மூலம் அணுகி நாம் இதுநாள் வரை செய்திட்ட நலத்திட்டங்கள் வழங்கிய உதவிகள் பட்டியலிட்டு இக்ரஃ மற்றும் ஷிஃபா அமைப்புகளுக்கு வருடாந்திர உதவிகளை அன்பளிப்பு வழங்க வேண்டுதல் விஷயம்மாக இந்த இரு அமைப்புகள் தொடர்பு கொள்ளவும் கேட்டு கொள்ளப்படுகிறது.
2. இக்ராஃ கல்வி சங்கத்தில் இரண்டாண்டிற்கென புதிதாக பொறுப்பேற்றுள்ள சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளரும் எங்கள் ஜித்தா மன்றத்தின் முன்னால் ஆற்றல்மிக்க செயற்குழு உறுப்பினருமான சகோ.பொறியாளர் எம்.எம்.மொஹ்தூம் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் இம்மன்றம் மனமார்ந்த நவாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு மேலும் உத்வேகத்துடன் சிறந்த பணிகளாற்ற வேண்டிக்கொள்கிறது.
3. அண்மையில் ஊரில் இரு முக்கிய இடங்களில் நடந்தேறிய தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் சிறப்பாக அமைய பெரும் ஒத்துழைப்பும், களப்பணிகளும் ஆற்றிய செயல்வீரர்கள், மருத்துவர்கள், சமூக நல நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் எல்லா வகையிலும் உறுதுணையாய் இருந்த அனைத்து காயல் நல மன்றத்தின் சகோதரர்களுக்கும் இம்மன்றம் நன்றி கலந்த பாராட்டுக்களை அன்போடு தெரிவிக்கிறது. இது போன்ற முகாம்கள் நம் நகரின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்படவேண்டுமென இம்மன்றம் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.
4. எங்களது ஜித்தா மன்றத்தின் செயலாளராக இருந்து நல்ல பல சேவைகளை எங்களோடு இணைந்து செயல்படுத்திய எம் மண்ணின் மைந்தன் கடையநல்லூர் தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள சகோ.குளம் ஏ.எம். முஹம்மது அபூபக்கர் MLA அவர்களின் சமூக, சமுதாய நலப்பணிகள் இனிதே தொடர எம்மன்றம் உளமார வாழ்த்துவதுடன் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறது.
5. நமது மன்றத்தின் 97 ஆவது செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் புனித மக்கா அல்லது யான்போ நகரில் அங்குள்ள உறுப்பினர்களின் வசதியறிந்து அக்டோபர் மாதம் 14 அல்லது 21-ஆம் தேதிகளில் வெள்ளிக்கிழமை நடத்திடவும் பின்னர் இதனுடைய தகவல்களை அறிந்து தெரிய தரப்படும்.
இக்கூட்டத்திற்கான முழு அனுசரணையை பார்மஸி சகோ.S.A.செய்யிது இஸ்மாயீல் சிறப்பாக செய்திருந்தார்.
சகோ.பிரபு எஸ்.ஜெ. நூர்தீன் நெய்னாவின் "துஆ மற்றும் கஃப்பாரா"வுடன் இச்செயற்குழு கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது . அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
சட்னி. எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
03.09.2016. |