காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில், காயல் மான்செஸ்டர் சார்பில் - 24 அணிகள் பங்கேற்ற மின்னொளி டை-ப்ரேக்கர் கால்பந்துப் போட்டி, கடந்த ஜூலை மாதம் 22, 23 ஆகிய நாட்களில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
அதன் இறுதிப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் சூப்பர் சீனியர் அணி, MSC A அணியை இறுதிப்போட்டியில் வெற்று முதலிடத்தைத் தக்கவைத்தது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவை, ஹாஃபிழ் ஜெ.எஸ்.அல்தாஃப் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பாலப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மைதானத்தை உள்ளடக்கிய 13ஆவது வார்டின் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சாதனை வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். ஐக்கிய விளையாட்டு சங்க செயற்குழு உறுப்பினர்களான எல்.கே.லெப்பைத்தம்பி, ‘கலாமீ’ செய்யித் உமர், ஏ.எஸ்.புகாரீ ஆகியோரும் பரிசுகளை இணைந்து வழங்கினர்.
சிறப்பு விருந்தினருக்கும், முன்னிலை வகித்த அவையோருக்கும், போட்டி ஏற்பாட்டுக் குழு சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
போட்டி ஏற்பாடுகளை, ‘காயல் மான்செஸ்டர்’ அணியின் தலைவர் ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
A.S.புகாரீ |