இந்தியாவின் 70ஆவது சுதந்திர நாள் 15.08.2016. திங்கட்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் அல்அமீன் நர்ஸரி & துவக்கப் பள்ளியில் சுதந்திர நாள் விழா, அன்று காலை 09.30 மணியளவில் நடைபெற்றது
பள்ளி தலைமையாசிரியை பி.ஏ.ஃபாத்திமா ஆஃப்ரீன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் ஆங்கில பேராசிரியை எஸ்.ஸஃபா மர்யம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய மன்றச் செயலாளர் ஜி.மணிமேகலை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பள்ளி மாணவியர் ஸஹானா ஹுமைரா, நஃபீஸத்துல் அதபிய்யா, ஆசியா மர்யம் ஆகியோர் மொழிபெயர்ப்புடன் திருமறை குர்ஆனை கிராஅத்தாக ஓதினர். பள்ளி ஆசிரியை எஸ்.எச்.குர்ரத்துல் அய்னிய்யா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் ஆங்கில பேராசிரியை எஸ்.ராதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி, வாழ்த்துரையாற்றினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகளும், கூட்டு உடற்பயிற்சியும் நடைபெற்றன.
பள்ளி முதல்வரும், தாளாளருமான எம்.ஏ.புகாரீ தேச பக்திப் பாடல் பாடினார். பள்ளி ஆசிரியை பீ.சங்கரி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியா திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
|