செய்தி எண் (ID #) 18203 | | |
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016 |
சாலை விபத்தில் ஒருவர் மரணம்! ஒருவருக்கு காயம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4434 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய |
|
திருநெல்வேலி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் காயலர் ஒருவர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார். மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த செய்யித் அஹ்மத், சித்தன் தெருவைச் சேர்ந்த ‘ஷிஃபா மெடிக்கல்’ எம்.ஐ.செய்யித் இப்றாஹீம் ஆகியோர், பணி நிமிர்த்தமாக, திருநெல்வேலிக்கு இரு சக்கர வாகனத்தில் இணைந்து சென்றுள்ளனர். 17.30 மணியளவில் அவர்கள் ஊர் திரும்பி வரும் வழியில், திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில், அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டதில், செய்யித் அஹ்மத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். செய்யித் இப்றாஹீமுக்கு தலையிலும், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கூடுதல் தகவல்கள் இதே செய்தியில் விரைவில்...
|