இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினம் 15.08.2016. திங்கட்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி, சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான - தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
மூன்றாவது வார்டு மாவட்ட பிரதிநிதி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா தலைமையேற்று, தேசிய கொடியேற்றினார்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் வரவேற்றுப் பேசினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூறினார். மூத்த தலைவர் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் இறைப் பிரார்த்தனை செய்தார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
கட்சியின் நிர்வாகிகளான எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், எஸ்.எச்.பஷீர் அஹ்மத், எஸ்.பத்ருத்தீன், எம்.இசட்.சித்தீக் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
(தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர், இ.யூ.முஸ்லிம் லீக் |