இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினம் 15.08.2016. திங்கட்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, SDPI / PFI அமைப்புகள் சார்பில், தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்டத்தின் நான்கு இடங்களில் நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஏ.உஸ்மான் தலைமையேற்று, தேசிய கொடியேற்றினார். காயல்பட்டினம் நகர கிளை தலைவர் எச்.எம்.அஷ்ரஃப் முன்னிலை வகித்தார். SDPI தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் சிறப்புரையாற்றினார்.
SDPI / PFI அங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டு, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
|