இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினம் 15.08.2016. திங்கட்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து, அப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவர் பிரிவில், இன்று காலை 09.30 மணியளவில் சுதந்திர தின விழா, பள்ளின் நிர்வாகி ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹியித்தீன் தம்பி தலைமையில் நடைபெற்றது.
பள்ளியின் நிர்வனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், பள்ளியின் பொருளாளர் ஏ.கே.கலீலுர்ரஹ்மான், துளிர் எம்.எல்.சேக்னா லெப்பை, பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், பள்ளி நிர்வாகி ஜனாப் ஏ.டபில்யு.ருக்னுத்தீன், பள்ளியின் செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மது ஷம்சுத்தீன் ஜனாப் ஏ.கே.அப்துர்ரஹ்மான், ஜனாப் எம்.ஐ.புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் எல்.எம்.எல்.தர்வேஸ் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் இறைவணக்கப் பாடல் பாடினர்.
பள்ளியின் தலைமையாசிரியர் டி.ஸ்டீஃபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழ் பண்பாட்டு கழகம்-ஹாங்காங் துணைத் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மது (ஜமால் மாமா) தேசிய கொடியேற்றி, வாழ்த்துரையாற்றினார். மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து ஏழாம் வகுப்பு மாணவர் இர்ஷாத் வ.உ சிதம்பரனார் பற்றிய உரையும், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆரிஷ் கொடி காத்த குமரன் பற்றிய உரையும், எட்டாவது வகுப்பு மாணவர்கள் வந்தே மாதரம் படலும், பதினொன்னாவது வகுப்பு மாணவர் பாரதியார் பாடல் போன்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், திருச்செந்தூர் அளவில் நடைபெற்ற பள்ளி கல்வி துறையின், குடியரசு நாள் விளையாட்டுகள், பாரதியார் நாள் விளையாட்டுகளில் 200 நாட்ஸ் பந்தையத்தில் எம்.என்.அப்துல் மாலிக் மூன்றாம் பரிசும், விண்கலம் பூப்பந்து ஒற்றையர் பிரிவில் எம்.ஏ.கே.முஹம்மது ஃபயாஸ் ரன்னராகவும், விண்கலம் பூப்பந்து இரட்டையர் பிரிவில் எஸ்.ஏ.இன்ஷாப் சுலைமான் வெற்றியும் பெற்றனர். மாணவர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள், பள்ளியின் நிர்வாகிகள் வழங்கினர்.
காயல் பாடகர் மர்ஹும் ஏ.ஆர்.சேக்முகம்மது அவர்களின் மூத்த மகனார் எஸ்.எம்.ஷமீம், சுகந்திரத்துக்காக பாடுபட்டோர்களை நினைவு கூருமுகமாக பாடினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்சிகள் யாவையும் தமிழ் ஆசிரியை சாமினி தொகுத்து வழங்கினார்.
இன்று காலை 09.30 மணியளவில், பள்ளியின் மாணவியர் பிரிவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. திருமதி. எம்.ஏ.கே.கிதுரு ஃபாத்திமா திருமதி நூருல் ஜன்னத், திருமதி செய்யது கதீஜாஅ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஹாஜா எம்.டி.சாரா உம்மா தேசிய கொடியேற்ற, மாணவியர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளியின் ஆசிரியர் செல்வி ஆயிஷா சமீரா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பள்ளியின் நிர்வனர் மனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமையுரையாற்றினார். மாணவியர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, திருமதி சிரியை செல்வி, நன்றியுரை தொடர்ந்து நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சியை வி.எம்.எஸ்.மரியம் மஷ்கூரா தொகுத்து வழங்கினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|