காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW ஆலை நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினம் 01ஆவது வார்டிலுள்ள அருணாச்சலபுரம் தேசிய தொடக்கப்பள்ளி கட்டிடம், 3 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலையின் மக்கள் தொடர்பு துணை மேலாளர் எஸ்.சித்திரவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டணத்தில் ரூ.3 லட்சம் செலவில் தொடக்கப்பள்ளி சீரமைக்கப்பட்டது.
காயல்பட்டணம் நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட அருணாசலபுரத்தில் உள்ள தேசிய தொடக்கப்பள்ளியை சீரமைத்து தரக்கோhp பள்ளி நிர்வாகம் சார்பில் டிசிடபிள்யூ நிறுவனத்திடம் கோhpக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்த சீரமைக்கப்பட்ட பள்ளியின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊர் தலைவர் திருத்துவராஜ் தலைமை வகித்தார். பள்ளி மகாசபை தலைவர் பன்னீர் செல்வம், பள்ளி செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டிசிடபிள்யூ நிறுவனத்தின் செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) மே.சி.மேகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னால் உதவி கலெக்டர் ஜனார்த்தனன், டாக்டர் ராஜன், சென்ட்ரல் வங்கி மேலாளர் மாணிக்கம், நடத்துனர் செல்வகுமார், தலைமை ஆசிhpயை சுகந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையின் நலத்திட்டப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|