இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர், காயல்பட்டினம் திருச்செந்தூர் வீதியை (வாவு நகரை)ச் சேர்ந்த வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், இன்று (13.08.2016. சனிக்கிழமை) அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,
மர்ஹூம் வாவு காதிர் ஸாஹிப் அவர்களின் மகனும்,
மர்ஹூம் சாவன்னா அபுல் ஹஸன் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் டபிள்யு.கே.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ, மர்ஹூம் டபிள்யு.கே.எஸ்.முஹம்மத் சுலைமான் ஆகியோரின் சகோதரரும்,
டபிள்யு.எம்.என்.காதிர் ஸாஹிப் உடைய தந்தையும்,
வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எஸ்.ஏ.அஷ்ரஃப், மர்ஹூம் ஏ.எச்.எம்.ஷாஹுல் ஹமீத்,ஏ.எச்.நெய்னா ஸாஹிப், ஏ.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மச்சானும்,
வாவு முபாரக் உடைய மாமனாரும்,
வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், வாவு எம்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
‘ஆசிரியர்’ S.M.அஹ்மத் சுலைமான்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
13.08.2016. சனிக்கிழமையன்று 15.30 மணியளவில் சேர்க்கப்பட்ட (நல்லடக்கம் குறித்த) கூடுதல் தகவல்கள்:-
அன்னாரின் ஜனாஸா, திருச்செந்தூர் வீதியிலுள்ள (வாவு நகர்) அவரது இல்லத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிறைக்கொடி போர்த்தப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
ளுஹ்ர் தொழுகை நிறைவுற்றதும், 13.00 மணியளவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு, 10 நிமிடங்களில் குருவித்துறைப் பள்ளியைச் சென்றடைந்தது. அங்கு ஜனாஸா தொழுகையை, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வழிநடத்தினார்.
13.30 மணியளவில் குருவித்துறைப் பள்ளியின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குருவித்துறைப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ துவக்க துஆ இறைஞ்ச, ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் தல்கீன் ஓதினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ நிறைவு துஆவை இறைஞ்சினார்.
பின்னர், குருவித்துறைப் பள்ளி - வெளிப்பள்ளி வளாகத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ‘முத்துச்சுடர்’ ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர், மறைந்த வாவு நாஸர் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினர்.
மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், அரபியிலும் - தமிழிலும் துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஜனாஸா தொழுகை, நல்லடக்கம், இரங்கல் கூட்டம் உள்ளிட்ட அனைத்திலும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாநகர நிர்வாகிகளான நவ்ரங் ஸஹாபுத்தீன், திரேஸ்புரம் மீராசா உள்ளிட்ட கட்சியினரும்,
நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் - அங்கத்தினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
வாவு நாஸர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் பொதுமக்களுக்கு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 15:30 / 13.08.2016.] |