காயல்பட்டினத்தில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய மக்கள் நலப் பணிகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, வாட்ஸ் அப், டெலிக்ராம் ஆகிய சமூக ஊடக செயலிகளில் துவக்கப்பட்டு, நகரின் அனைத்துப் பகுதி மக்களையும் உள்ளடக்கி, கட்டுக்கோப்பான கருத்துப் பரிமாற்றங்களுடன் இயங்கி வருகிறது - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்.
இதன் வாட்ஸ் அப் குழுமத்தில், அனுமதிக்கப்பட்டுள்ள 256 இடங்களும் பூர்த்தியாகி, புதிதாக உறுப்பினராவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 50 பேரின் விண்ணப்பங்கள் இன்றளவும் நிலுவையில் உள்ளன.
இக்குறையைத் தவிர்ப்பதற்காகவும், நகரின் அனைத்து பொதுமக்களையும் உள்ளடக்கி விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, அவற்றினடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் - 5000 பேரை உறுப்பினராக்கும் வசதி கொண்ட “டெலிக்ராம்” குழுமம் துவக்கி, இயக்கப்பட்டு வருகிறது.
அதில் உறுப்பினராவதற்கான வழிமுறைகளை விளக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது:-
“நடப்பது என்ன?” குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|