காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (IIM) நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இஸ்லாமிக் பைத்துல் மால் சார்பாக, நகரிலுள்ள நலிந்தோரின் பல்வேறு தேவைகளுக்காக கடந்த 15 ஆண்டுகளில் 82 லட்சத்து 66 ஆயிரத்து 751 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பை உள்ளடக்கிய ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (IIM) நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இஸ்லாமிக் பைத்துல் மால், கடந்த 1989ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு - எவ்வித கொள்கை வேறுபாடுகளுமின்றி - மருத்துவம், கல்வி, சிறுதொழில், குடிசை கட்டுமானம், பொது நிவாரணம் உள்ளிட்ட வகைகளுக்காக பைத்துல் மால் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில், துறை வாரியாக வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை விபரப் பட்டியல் வருமாறு:-
* மருத்துவம் >>> ரூபாய் 46,06,148 >>> 1991 பேருக்கும்,
* கல்வி >>> ரூபாய் 19,43,483 >>> 374 பேருக்கும்,
* தொழில் >>> ரூபாய் 3,68,740 >>> 157 பேருக்கும்,
* குடிசை பராமரிப்பு >>> ரூபாய் 10,72,282 >>> 466 பேருக்கும்,
* பொது நிவாரணம் (கத்னா செய்தல், பொது மருத்துவ முகாம் நடத்தல், நிராதரவாய் நிற்கும் பயணியருக்கு உதவி உள்ளிட்ட வகைகளுக்காக) >>> ரூபாய் 2,76,098
இவ்வாறாக வழங்கப்பட்ட மொத்த உதவித்தொகை >>> ரூபாய் 82,66,751 ஆகும்.
இம்மகத்தான பணிகள் இன்ஷாஅல்லாஹ் இனியும் தொய்வின்றித் தொடர்ந்திட, பொதுமக்கள் என்றும் போல் உங்கள் நல்லாதரவைத் தொடர்ந்து மனமுவந்து வழங்கிடுமாறு வேணண்டுகிறோம். ஜஸாக்குமுல்லாஹு கைரா...
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.S.முஹம்மத் யூனுஸ்
இஸ்லாமிக் பைத்துல்மால் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐஐஎம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |