செய்தி: காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[07 August 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44379
மாஷா அல்லாஹ்! எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே! நமதூர் மக்களின் பேருந்து பயண இன்னலை நீக்கவேண்டும் என்ற நெடிய நாள் கோரிக்கையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில்'நடப்பது என்ன" வாட்ஸப் குழுமத்தினரால் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பரித்து அலை அலையாய் செந்தூரில் சங்கமமாகிய மதிப்புயர் காயால் கண்மணிகளே !
சுட்டெரிக்கும் வெயில்கூட ஏதோ சுகம் தரும் சுவனம் போல் வெட்ட வெளியில் ஊர்மக்கள் நலனே எங்கள் நலன் என்று உங்கள் சொந்தவேலைகளையும்,வியாபாரங்களையும்,
வியாபார ஸ்தாபனங்களையும் இந்த நாளில் புறந்தள்ளிவிட்டு பக்கத்து ஊருக்கு பறந்து வந்து போராட்டத்தில் பங்கெடுத்த பண்புக்குறியவர்களே ,புண்ணியவர்களே உங்கள் அனைவர்களையும் ஆரத்தழுவ துடிக்கிறோம், அடக்க முடியா ஆனந்த கண்ணீரோடு உங்கள் கரங்களுக்கு கனிவான முத்தமிட மனம் அலைமோதி ஆர்ப்பரிக்கிறது, அரபகத்தில் அல்லாவா இருக்கிறோம் என்ன செய்வது!
உலக அமைப்பின்படி ஆயிரக்கணக்கான மையில்களுப்பால் அரேபியாவில் இருக்கிறோமேயல்லாது எங்களின் "ஆத்மா' என்றழைக்கும் அந்தரங்க இதயங்கள் உங்களோடுதான் இருந்தது,.ஒவ்வொரு நொடியும் உங்களை வாழ்த்திக் கொண்டும்,உங்களோடு வலம் வந்துகொண்டுமிருந்தது! உங்களின் உள்ளார்ந்த உணர்வுகளால் நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள்!`
உங்களின் இந்த புண்ணிய தொண்டின் மூலமாக வல்ல அல்லாஹ் நம்முடைய இலட்சியத்திற்குறிய வெற்றிக்கனியை விரைவில் தரத்தயாராகிவிட்டான்,அதை உளம்குளிர உண்டு மகிழத்தான் போகிறோம்!
அந்த போராட்ட புகைப்படத்தில்,ஆட்சிமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோரைக்காணோம் ஊர்மக்களின் நலனே எங்கள் நலன் என்று முழக்கமிட்டு மார்தட்டிய அவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள் காயல் பெருங்குடி மக்களே!
மக்களை மாக்கள் என்று எண்ணி மக்களுக்கு மகிமைமிக்க சேவை செய்ய காத்திருக்கிறோம் என்ற மயக்க வார்த்தைகளோடு மறுபடியும் பதவி பிச்சைகேட்டு கதவை தட்டவும் தயங்க மாட்டார்கள் ஒருசில உதவாக்கரை உள்நோக்கமுடையவர்கள் அவர்களையும் ஒதுக்கித்தள்ள தயங்க வேண்டாம்!
புரிந்து கொள்ளுங்கள் பண்பட்ட காயல்பதி மக்களே ,தியாக உணர்வுடன் புண்ணிய காரியங்களில் களப்பணி
காணும் பெருந்தன்மையானவர்களே! பச்சோந்திதனத்துடன் இக்காயிலை சில ஏகாதிபத்திய எஜமானர்களின் காலடியில் விழ வைத்த சில வீணர்களும் வலம் வருவார்கள் அவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!
மண்ணின் மைந்தன் நான் இம்மண்ணிற்காக நான் என்னையே அர்ப்பணிக்கிறேன் அதில் எந்த கொள்கையோ,கட்சியோ, அமைப்போ என்னை ஆடப்படுத்தாது என்று வீர வசனம் பேசிய அந்த அரசாங்க பொறுப்பு அங்கத்தினருக்கு கூட இந்த போராட்டம் ஒரு பித்தலாட்டமாக த்தெரிந்ததா?உங்கள் சொல்லுக்கும் ,செயலுக்குமுறிய வேறுபாட்டையும், மாறுபாட்டையும் அந்த மறை தந்த இறையோனிடமே விட்டுவிடுகிறோம்!
ஒரு சில வீணர்கள் விஷஉணர்வுடன் இந்த போராட்டம் ரத்து (கேன்சல்) ஆகிவிட்டது என்று தம்பட்டம் அடித்ததாக கேள்வி அவர்களை இழிவுடன் இனம் காட்டிவிட்டான் எல்லாம் வல்ல அல்லாஹ்!
நம்முடைய ஆர்பாட்டங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அணுஅணுவாக அவதானித்துக் கொண்டிருக்கிறான் ஆர்பாட்டத்திற்காக உழைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அதற்கு ஆதரவளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அந்த கிருபையாளன் வளமான,நலமான ,நன்மையான வாழ்வைக்கொடுத்து நம் நட்டங்களை நிறைவேற்றித் தந்தருள்வானாக ஆமீன்!
முடிவாகவும், மறுமுறையும் அனைத்து ஆர்ப்பாட்ட அன்புள்ளங்களுக்கு என் இதயம் மகிழும்,நெகிழும் நல்வாழ்த்துக்களை அவர்களின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross