ஆனால் இன்று ஏழைகளுக்கும்,புண்ணியங்களுக்கும் பயந்துவிட்டான் அதாவது மனிதனே மனிதனுக்குப்பயந்துவிட்டான் அதனால் குளிர்சாதனப்பெட்டிகளிலெடுக்கி வைத்துவிட்டு கூ...லாக சூடாக ஒன்றுமில்லை வாய்கூசாமல் சொல்லிவிடுகிறான் மனம்வரண்டுவிட்டது குணமும் புரண்டுவிட்டது அதனாலேயே ஆரோக்கியத்தையிழந்து நோய்களுக்குத்தாய்மையாகிறான் மருத்துவத்திற்கும் மருத்துவர்களுக்கும் அடிமையாகிறான் .
என்னைப்பொறுத்தவரை தானத்தில் சிறந்தது நிதானம்தான் பிறகுதான் அன்னதானம் நம்மிடம் கொடுக்க ஒன்றுமில்லையென்றாலும் இசைவாயில்லையம்மா என்று சொல்வதுதான்உத்தமமாயிருந்தது இன்றுஅதுவும்மாறி நிதானம்இறந்துவருகிறது கோபம்சிறந்துவிளங்குகிறது இறைவன் பிழைபொறுக்கக்கூடியவன்.
எனதுசிறுபிராயத்தில் நடந்த ஒருசம்பவத்தை இங்கு நினைவுகூருகிறேன்
ஒருநாள் காளை பள்ளிக்கூடம்விட்டு சாப்பிடுவீட்டுக்கு வரும்போது வழியில் ஒருவீட்டில் கணவன்,மனைவிக்குள் ஏதோவாய்த்தகராறு நடந்துகொண்டிருந்தது அப்பொழுது அந்தப்பக்கம்வந்த ஒருமிஸ்கீன்ப்பெண் 'உம்மா சோறுபோடுங்கம்மா' என்றுகுரல்கொடுத்தார் உடனே அந்தவீட்டுப்பெண்மணி சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒருதட்டில் சோறுஎடுத்துவந்துகொடுத்தார்கள் அந்தமிஸ்கீனும் வாங்கிக்கொடு வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்கள்
நான் அதைவேடிக்கைபார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் அங்கேயே நின்றேன் பிறகுசப்தமேவரவில்லை,
அந்தவீட்டில் நல்லமாற்றம் எனக்குஏமாற்றமே சின்னவயசுதானே வேடிக்கைபார்க்கும்வயது இறைவன் மன்னிக்கக்கூடியவன்
அன்று அந்தவீட்டில் வழங்கப்பட்ட ஒருபிடிசோறு சண்டையை துண்டித்துவிட்டது இந்த சம்பவம் அனுபவரீதியாக நல்லநிகழ்வு அல்ஹம்துலில்லாஹ்.
இன்றும் பலவீடுகளில் சண்டை நடக்கிறது நிறையச்செய்யாதே அப்படிசெய்தால் மீதியையாருக்காவதுகொடு சும்மா பிரிட்ஜில அடுக்காதே அது அல்லாஹ்வுக்கு அடுக்காதென்று வாதிட்டுக்கொடுப்பவர்களுமுண்டு.
இயற்கையாக நாம் ஒருஉண்மையை இன்னும் நாம் உணர்ந்துகொள்ளவில்லை உண்ணுவதெல்லாம் உணவென்றும் மின்னுவதெல்லாம் பொன்னென்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம் உணவென்றபெயரில் வெறும்பொருள்களைசாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் அதாவது சக்கைகளை மட்டுமே
மீண்டும்,மீண்டும் ஒருஉணவைசுடவைத்து சுடவைத்து சாப்பிடுவதால் அதன் மெய்க்காரணிகள் மாறிவிடுகின்றன.
கட்டுரை ஆசிரியர் தம்பி ஷமீமுல் இஸ்லாம் இறைவசனங்களோடும்,ஹதீதுகளோடும் திரும்பிப்பார்க்கவைத்திருக்கிறார் எளியநடை மாஷா அல்லாஹ் தொய்வில்லாது தொடரட்டும் வாழ்த்துக்கள் வல்ல இறைவன் நாம்பயன்படுத்தும் உபகரணங்களையும்,செயல்களையும் நற்சாட்சி பகரும் நிலையைத்தந்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross