Re:...குத்பா பேருரை posted bymackie noohuthambi (kayalpatnam )[14 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44451
நேற்று முன்தினம் நடந்த குத்பா பேருரை காயல்பட்டினம் மொகுதூம் ஜும்மா மஸ்ஜித் கதீப் கண்ணியத்துக்குரிய காஜா முஹிய்யித்தீன் ஆலிம் காஷிஃபி அவர்கள் இந்தியாவின் 70 வது விடுதலை நாள் பற்றி உரையாற்றினார்கள்.
மகாத்மா காந்தி அவர்களை மட்டுமே முன்னிறுத்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த பிதாமகனாக அடையாளம் காட்டுகிறார்கள். காந்தியை பற்றி பேசத்தான் வேண்டும் அதே நேரம் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் கழகத்தை பற்றியும் அதில் உயிரிழந்த முஸ்லிம்களை பற்றி பேச மறந்து விடுகிறோம். வட்ட மேசை மகா நாட்டுக்கு காந்தி போனதை பேசுகிறோம். ஆனால் எனது தோள்களில் இரண்டு சிங்கங்களை சுமந்து செல்கிறேன் என்று அவரே சொன்னாரே அப்படி பட்ட சிங்கங்கள் மௌலானா முஹம்மது அலி சௌகத் அலி பற்றி பேச மறந்து விட்டோம்.
அப்துல் கலாம் பற்றி பேசுகிறோம்
மௌலானா அபுல் கலாம் பற்றி பேச மறந்து விட்டோம்.
கப்பலோட்டிய தமிழன் வ வு சி பற்றி பேசுகிறோம்
அவர் கப்பல் வாங்குவதற்கு உதவி செய்த பக்கீர் முஹம்மது பற்றி பேச மறந்து விட்டோம்.
இப்படியே சுதந்திர போராட்ட விழுமியங்களில் முஸ்லிம்கள் கைகோர்த்து சென்றுள்ள உண்மைகளை முஸ்லிம்களே மறந்து விட்டோம் அல்லது நமது இளைய சமுதாயம் அவற்றை அறிய விடாமல் சரித்திரங்கள் திரித்து திருத்தி எழுதப் பட்டுள்ள அவல நிலை பற்றி மூச்சு விடாமல் 45 நிமிடங்கள் அந்த பெருமகனார் பேசியபோது, ஜும்மா பிரசங்கம் என்பது அது வெறும் சும்மா பிரசங்கம் அல்ல சடங்குக்கு நிகழ்த்தப்படும் உரை அல்ல, அவ்வப்போது நாட்டு நடப்புக்களை முஸ்லிம்கள் அறிந்து அதில் ஆற்ற வேண்டிய பங்குகள் பற்றியும் முஸ்லிம்கள் அடைந்துள்ள பின்னடைவுகளுக்கான காரணங்கள் பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் நிதர்சன உண்மை என்பது புரிந்தது.
சகோதரி உம்மை நுமைரா அவர்கள் இதை தொடர் 1, 2 என்று தொடர வேண்டும் அப்போதுதான் அவர்களும் இந்த சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமையை செய்திருக்கிறார் என்று சொல்ல முடியும் எத்தனை பெண்களுக்கு இந்த செய்தி தெரியும். இன்று கல்லூரிகள் பெருகிவிட்டன பெண்கள் கல்லூரிகள் நிறையவே இருக்கின்றன. நமதூர் மாணவிகள் மணவிழா அழைப்புக்களில் மணமகனை விட மணமகள் பெற்றுள்ள பட்டங்கள் பட்டயங்கள் நம்மை அதிர வைக்கின்றன. சில இடங்களில் பெண்ணின் பட்டங்களை போடாதீர்கள் அது மணமகனுக்கு இழுக்கு ஏனெனில் அவர் அதிகம் படிக்க வில்லை என்ற செய்தியை தோலுரித்துக் காட்டி விடும் என்று சொல்கிறார்கள். அதனால் பெண்களுக்கு ஒரு வகையான EGO ஏற்படும் மணமகனுக்கு INFERIORITY COMPLEX ஏற்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
குறைந்த பட்சம் நமது சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பை பட்டியலிட்டு எழுதினால் அதை தங்கள் WHATSUPP களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு ஓய்வான நேரத்தில் பார்த்து படிப்பதற்கு வசதியாக இருக்கும்.
நீங்கள் செய்வீர்களா?
நீங்கள் படித்த புத்தகங்கள் நீங்கள் சொல்வது போல் ஒரு ஒய்வு நேரத்தில் படித்து உணர்ச்சி பொங்கி எழுந்ததுபோல் காந்தி அவர்களுக்கும் ஏற்பட்டது. அதுதான் பிற்காலத்தில் அவருக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது,,,வெள்ளையனே வெளியேறு என்று போராடி அவனை விரட்டி அடிக்கவே அடிகோலியது.
RUSKIN 'S ''UNTO THIS LAST'' என்ற புத்தகம்தான் அது. POLAK என்ற காந்தியின் நெருங்கிய நண்பர் அவர். தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி வழக்கறிஞர் தொழில் செய்ய புறப்படுகிறார். ரயில் பயணத்துக்கு வழியனுப்ப வந்த POLAK இந்த புத்தகத்தை அவர் கையில் கொடுக்கிறார். போகும் வழியில் படித்துப் பாருங்கள் என்றும் சொல்கிறார். காந்தி அதை ஓரமாக வைத்து விட்டார். ரயில் புறப்படுகிறது , காந்திக்கு தூக்கம் வருகிறது, சற்று சோர்வும் வருகிறது, சரி POLAK தந்த புத்தகத்தை படிப்போம் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்தார்.அவர் வாழ்க்கை பாதையே மாற்றியமைத்தது புரட்டி போட்டது அந்த புத்தகம்.
'' RUSKIN'S UNTO THIS LAST BROUGHT AN IMMEEDIATE AND AN INSTANTANEOUS TRANSFORMATION IN MAHATMA GANDHI'S LIFE'' என்று சரித்திர ஆசிரியர்கள் அதை வர்ணிக்கிறார்கள்...
உங்கள் கட்டுரை தொடராக வெளி வந்தால் அப்படி பட்ட ஒரு சூழலை இந்த சமுதாயத்தில் மீண்டும் ஏற்படுத்த முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross