செய்தி: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகிகளுடன், ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு! வீடியோ பதிவு வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byHameed Rifai (Jeddah (KSA))[24 August 2016] IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44499
அன்பின் ஆதம் சுல்தான் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...
ஐக்கியப் பேரவை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நமதூரின் ஒரு தனி நபரைக் கண்டித்து நடத்தப்பட்டது மட்டுமல்ல, அந்த தனிநபரை - அவர் இந்த ஊரின் அவலம் - ஊரில் குடியிருக்கவே தகுதியற்றவர் என்பது போல் சித்தரித்து, அவர் பொறுப்பு வகிக்கும் ஜமாஅத் நிர்வாகத்தைக் கைப்பற்றப் போவதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மொத்தத்தில், நமதூரின் ஒரு குடிமகனுக்கும் - ஒரு ஜமாஅத்திற்கும் எதிராக நடத்தப்பட்டதே அந்த (ஆராயாத - ஆராய முற்படாத - ஆராய வேண்டும் என பலரால் வலியுறுத்தப்பட்டும் கண்டுகொள்ளாமல் நடத்தப்பட்ட இந்த) ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்தை நடத்தியது தனிநபரையும், ஜமாஅத்தையும் இணைத்தே என்பதால், அதற்கான விளக்கமும் இரண்டையும் இணைத்தே வழங்கப்பட்டுள்ளது. ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டையும் இணைத்ததன் காரணமாகவே, இரண்டுக்கும் இணைத்து பதில் கொடுக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்...
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கியப் பேரவையால் ஊருக்கு எந்த நன்மையும் இல்லை என்பது மட்டுமல்ல! அதன் கடந்த கால அனைத்து செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்த ஊரில் இயங்கத் தகுதியற்ற அமைப்பாகவே அதை நான் கருதுகிறேன்.
மொத்தத்தில், பேரவையைக் கொண்டு நமதூருக்கு நன்மையோ, இல்லையோ...... அதைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு சிலருக்கு ‘நிறைய்........ய’ நன்மைகள்! சில ஜமாஅத்துகளுக்கும், பல தனிநபர்களுக்கும், பல பொதுநல அமைப்புகளுக்கும் பெரும் தீமையே நடந்திருக்கிறது என்பதை விளக்கிட, ஒவ்வொன்றையும் மையப்படுத்தி தனித்தனி கட்டுரையே எழுத வேண்டும். அவ்வளவு சரக்கு உள்ளது.
“ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி ஜமாத்தார்களை சந்த்தித்து விளக்கம் பெற சென்றார்களா?அல்லது தனிமனிதர் மஹ்மூது அவர்களுக்கும் ஐக்கியப் பேரவைஇங்கும் இடையில் (10 வருடத்திற்கு) முன்னால் நடந்த விவகாரத்தை பேச சென்றார்களா என்று தெரியவில்லை?” c&p
இவ்வாறு தாங்கள் கூறியிருக்கிறீர்கள்... ஒரு பேச்சுக்கு, உங்கள் கருத்துப் படி, ஒரு தனி நபரின் விளக்கத்தைக் கேட்பதற்காக பேரவையின் இந்தப் பிரதிநிதிகள் குழு சென்றது கேள்விக்குரியது என்றால்,
அதே தனிநபருக்கு எதிராக - நகரின் அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும் (அவர்களுக்கு உண்மை விவரங்களை மறைத்து, இருட்டடிப்பு செய்து, பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி, அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு) ஆர்ப்பாட்டம் நடத்திய செயல் மகா கொடூரம் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்???
தனது - தன் குடும்பத்துப் பிரச்சினைகளையெல்லாம் ஊர்ப் பிரச்சினையாக்கி, எல்லா ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள்... ஏன்? ஆலிம்களையெல்லாம் அழைத்து கோஷம் போட வைத்தது நமது “அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான (???)” ஐக்கியப் பேரவை!
அதே நேரத்தில் ஊரின் முக்கியப் பிரச்சினைகளான கலாச்சார சீரழிவுகள், ஒழுக்கக் கேடுகள், இறைச்சி விலையேற்றம், இன்று நானும், தாங்களும் அங்கம் வகிக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நகரின் அனைத்து தரப்பு பொதுமக்களையும் அரவணைத்து, கையில் எடுத்து நடத்தி வரும் - ஆட்டோ கட்டண ஏற்றம், ஆட்டோ ஓட்டுநர்கள் (அனைவரும் அல்ல!) பலரின் தகாத நடவடிக்கைகள், நகராட்சியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் செயல்படுத்தப்படாமலிருக்கும் அவலம், போக்குவரத்து நெரிசல்கள், நமதூரைப் புறக்கணித்து செல்லும் பேருந்துகளை மீண்டும் இவ்வழியில் இயக்குதல், மது ஒழிப்பு, சாலை விதிகளை மாணவர்கள் மதிக்கச் செய்தல்
என இப்படி ஊருக்கு அவசியமான - போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சரி செய்ய வேண்டிய பல பிரச்சினைகள் இருக்க, அவற்றையெல்லாம் யாருக்கோ, எவருக்கோ நடந்த பிரச்சினை போல கண்டுகொள்ளாமல் - முக்காடிட்டு ஒளிந்துகொண்டது...
அதே அழுக்கடைந்த முக்காட்டை - கொஞ்சம் கூட சுத்தம் செய்யாமல் அணிந்த நிலையில் - மீண்டும் வரவுள்ள நகர்மன்றத் தேர்தலில் காற்று குடித்து உயிர் பெற எத்தனிக்கும் முயற்சி... என எதுவுமே பார்ப்பதற்கு நன்றாக இல்லை.
இனியேனும், உளத் தூய்மையுடன் - வெளிப்படையாக - அனைவரையும் அரவணைத்த நல்ல நிர்வாகத்தை அரசுப் பதிவுடன் தருவார்களானால், அப்படியொரு அமைப்பு நமதூருக்கு அவசியமே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross