Re:...உள்ளாட்சியில் நல்லாட்சி posted bymackie noohuthambi (kayalpatnam )[30 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44564
உள்ளாட்சியில் நல்லாட்சி என்று முழங்கிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நமது மண்ணின் மைந்தர் அபூபக்கர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
சிலர் நாக்கு கரு நாக்கு அதுதான் பலித்து விட்டது என்பார்கள். சிலர் நாக்கில் விஷயமிருக்கிறது அதுதான் இப்படி நடக்கிறது என்பார்கள். சிலர் நாக்கில் விஷமிருக்கிறது அதுதான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்பார்கள். சிலர் கராமாத்துள்ள நல்லடியார்களின் து ஆ பரக்கத் இவருக்கிருக்கிறது என்பார்கள்.
ஆனால் இந்த செய்தியை படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. ஆட்சியில் யார் யார் அமர்கிறார்களோ அவர்கள் இஷ்டத்துக்கு இந்த விஷயத்தை அவர்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குகிறார்கள். வானளாவிய அதிகாரம் படைத்த முதல்வர் சபாநாயகர் என்ற துணிச்சலில் இதை செய்கிறார்கள், முன்னாள் முதல்வர் கலைஞரும் சரி இந்நாள் முதல்வர் அம்மாவும் சரி இனி யாராவது 2021 புதியவர்கள் முதல்வராக வந்தால் அவர்களும் சரி இதையே செய்வார்கள். இந்த சட்டம் சரியா தவறா என்பதை பற்றி ஒட்டியும் வெட்டியும் விவாதம் செய்ய சட்டமன்றத்தில் எதிர்க்க கட்சிகளும் இல்லை. 98 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பெரிய வரலாறு காணாத எதிர்க்க கட்சிகளைக் கொண்ட சட்ட மன்றம் என்ற பெயர் மட்டும் இருக்கிறது.
ஆனால் நமதூரைப் பொறுத்தவரை நமதூருக்கு இது ஒரு நிம்மதி தரும் செய்தி என்றுதான் நினைக்க தோன்றுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நகர்மன்றம் செயல்பட முடியாமல் இருந்தது. நகர்மன்ற தலைவரை எதிர்த்து நகர்மன்ற உறுப்பினர்களும் நகர் மன்ற உறுப்பினர்களை எதிர்த்து நகர்மன்ற தலைவரும் மாறி மாறி தங்கள் தரப்பு நியாயங்களை மக்களிடம் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒன்றுபட்டு இந்த ஊரின் முன்னேற்றத்துக்காக என்ன செய்தீர்கள் என்று யாரும் கேட்டால் அதற்கு ஒரு விரலை காட்டி குற்றம் சாட்டுபவர்கள் தங்களுக்கு எதிராக தங்களின் மூன்று விரல்கள் தங்களையே குற்றம் சாட்டுவதை வசதியாக மறந்து விட்டார்கள்.
இப்போது ஒரு மாற்றம் கண்ணுக்கு தெரிகிறது. கட்சி அடிப்படையில் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் அந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் நகர் மன்ற தலைவரை தேர்ந்தேடுப்பதும் நல்ல அணுகு முறைதான். ஆனால் நாம் நினைக்கும் நல்லவர்கள் கறை படாத கரத்துக்கு சொந்தக் காரர்களும் எல்லா கட்சியிலும் இருக்கவே செய்வார்கள்.கூடியவரை இளைஞர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
YOUTHS ARE NOT USELESS - THEY ARE USED LESS
இளைய தலைமுறையினரின் வேகம் முதிய தலைமுறையினரின் விவேகம் இரண்டும் கைகோர்த்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் நாம் கனவு காணும் உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற எண்ணம் நனவாகும்.வெறும் கோஷங்களால் அதை சாதிக்க முடியாது.
எனவே உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய இவர்கள் எல்லோரும் தக்வா என்ற இறை அச்சம் உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். யாருடைய நெற்றியிலும் அந்த இலச்சினை ஓட்டப் படவில்லை. அது உள்ளம் சார்ந்த விஷயம் எனவே நாம் அல்லாஹ்விடமே திரும்ப வேண்டும். அவனிடமே இரு கரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும். நபிகள்நாயகம் அவர்கள் நமக்கு கற்று தந்த து ஆ வை அதிகம் அதிகம் ஓதி நமது வாக்குகளை செலுத்த வேண்டும்.
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VA LAA YARHAMNA .....
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி நடப்பவை நல்லவைகளாக அமையட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross