Re:... posted bymohamedyounus (Dubai)[05 September 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44591
நான் சென்ட்ரல் மேல் நிலைப்பள்ளியில் ஆயுள் கைதி (அதாவது குட்டியாப்பு முதல் +2 வரை அங்குதான்- இடையில் எங்கும் செல்லவில்லை)
அன்று பள்ளி என்றாலே நன்றாக படிக்கும் மாணவர் உட்பட அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் கசப்புதான். மூன்றாம் வகுப்பு வரை இரண்டு மூன்று புத்தகத்தை துணி பையில் எடுத்து கொண்டு செல்லும்போது ஏதோ உம்மாவை விட்டு நிரந்தரமாக பிரிந்து போகிறோமோ என்ற உணர்வுடன் ஒரு விதமான அழுகை முட்டி கொண்டு வரும். பள்ளி சென்றவுடன் நின்று விடும். இப்போதுதான் எனக்கு வயிறு வலிக்கிறது.. பள்ளி செல்ல மாட்டேன் என்று ஆடம் பிடித்த நாட்கள் நிறைய உண்டு. ஆண்டு விடுமுறை வரட்டும் உன்னை ஆந்திராவிற்கு கூட்டி செல்கிறேன் என்ற பசப்பு வார்த்தைகள் எல்லாம் காதில் விழாத காலம் அது.
டியூஷனில் மின்சாரம் போகாத என்றும், அடை மழை பெய்து பள்ளி கூடம் விடுமுறை விட மாட்டார்களா என்று ஏங்கிய நாட்கள் அவை. சிறுதுளி தான் மழை பெய்து இருக்கும்.. ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கு கடுமையான மழை இருக்கிறதாமே என்று கூறி நாங்களாகவே" ரமணன்" ஆகிய நாட்களும் உண்டு. ஆண்டு விடுமுறை வந்துவிட்டால் ஒவ்வொருவரும் விடுமுறை செல்லும் இடத்தை கூறி அங்கலாய்ப்பதும், ரயிலில் டிக்கட் எடுப்பதற்காக கன்செஸ்ஸன் பாமிற்கு பள்ளி அலுவலகம் செல்வதும்... மிக சுவாரஸ்யமானவை...
ஆனால் இவ்வளவு அழுகையுடன் பள்ளிக்கு சென்ற அந்த நாட்கள் இன்று மிக இனிதாக நினைவு கூற தக்கவை..
ஆனால் இதற்கு மாறாக இன்று அழுகைகள் எல்லாம் இல்லை..சுற்றி வர சலுகைகள்..
வண்ண வண்ண உடையில் யூனிபார்ம், வியாபாரிகள் வைத்து இருக்கும் சூட்கேஸ் போன்று பைகள், அழகான சூக்கள், இரண்டு மணியோடு முடிந்து விடும் பள்ளி, வீட்டு வாயிலில் கூட்டி போக பேருந்துகள், ஏசி அறைகள், தின்பண்டங்கள், விளையாட்டும் ஒரு பாடமான போன்ற இன்றைய கல்வி முறைகள்...
இவ்வளவு இருந்தும் இன்றைய மாணவர்கள் இந்த நாட்களை நம்மை போன்று இனிதாக நினைவு கூறுவார்களா என்றால் இல்லை..
ஏன்?
அவ்வளவு கல்வி சுமை, பாட சுமை, போட்டி தேர்வுகள், பெற்றோர்களால் திணிக்க்கப்படும் வகுப்புகள், 20 வருடங்கள் கழித்து எழுதப்போகும் போட்டி தேர்வுக்கு இன்றைய அவர்களை தயார்படுத்திடும் நெருக்கடிகள்..
வீட்டிற்கு சென்றும் படிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்களுக்கு பள்ளிகளால் வைக்கப்படும் தேர்வுகள், ஒரே வீட்டிலேயே காணப்படும் குழந்தைகளுக்கு இடையேயான ஒப்பீடல்...
எப்படி அவர்களை இந்த நாட்களை பின்னாட்களில் அசை போட வைக்கும் ?
ஒரு நாள் லீவு என்றாலே சிறகடித்து பரந்த அந்த நாட்கள்...
இன்று விடுமுறையில் தாய் தந்தை கூப்பிட்டாலும் எனக்கு ப்ரொஜெக்ட், ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கிறது என்று தட்டிக்கழிக்கும் இன்றைய நிலை.
ஒன்று தெரியுமா? இதனால் பிள்ளைகளுக்கு மட்டும் மனசோர்வு, பதட்டம் ஏற்படுவதும் இல்லை... பெற்றோர்களுக்கும்தான்.
இத்தகைய சிக்கல்களால் "குழந்தைகள் மன நல மருத்துவர்கள்" பெருகி விட்டார்கள். " குழந்தை மன நல மருத்துவம்" என்ற ஒரு பிரிவும் சென்னை மருத்துவ பல்கலை கழகத்தில் துடைங்கப்பட்டு இருக்கிறதாம்.
ஒன்றை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
ஒரு சிறிய கண்டிப்புடன் அவர்களுக்கு இறைவன் வழங்கிய தனி திறமையை புரிந்து கொண்டு அதை மெருகேற்றி அவர்களை சிறைப்பட செய்வதற்காக வளர்க்கப்படும் குழந்தைகளே பின்னாளில் சிறந்து வளர்க்கிறார்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross