செய்தி: கத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக கோப்பையைத் தட்டிச் சென்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை posted bymackie noohuthambi (kayalpatnam )[11 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44617
அருமையான ஒரு இன்சுவை நிகழ்ச்சி.
அசத்தப் போவது யார் என்று தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடக்கும் அதற்கு நிகரான ஒரு நிகழ்ச்சி. எல்லோருக்கும் ஆசைதான் இந்த நிகழ்ச்சியில் ஒரு பரிசு பெற்றுவிடமாட்டோமா என்று. அந்த ஆசைதான் பார்வையாளர்களையும் பைத்தியமாக்கி பரிசுகளுக்காக விடைகளை முன்கூட்டியே சொல்ல ஆசைப் பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனாலும் மாணவ மாணவிகளுக்கான போட்டி என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி வந்து விட்டது.
சின்ன சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
சாதாரண கேள்விகளுக்கும் விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் கேள்வி கேட்டவருக்கே சவால் விடும் அளவுக்கு பெரிய கஷ்டமான கேள்விகளுக்கு மிக சாதாரணமாக விடை அளித்து பொது மக்களை அசர வைத்தார்கள். சிறுவர்களுடன் சிறுவர்களாக இருந்து அவர்களுடன் சேர்ந்து நாமும் சிறுவர்களாக ஆகி மகிழும் தருணங்கள் ஒவ்வொன்றுமே வாழ்க்கையில் நாம் பெறும் பேறுதான்.
வெளி நாடுகளில் வேலை பார்ப்பதும் தொழில் செய்வதும் பொருளீட்டுவதுமாக நம் இளமையை கழித்த காலங்கள் - நம் மக்களுடன் பேசக் கூட நேரம் ஒதுக்க முடியாமல் பிஸி யாக இருந்த காலங்கள் நாம் இழந்த இன்பங்கள் இவற்றை இந்த விழா நாட்களில் மனநிறைவுடன் சமன் செய்து கொண்டோம்.
ஒரு தந்தை தன் மகன் விழிக்குமுன் பணிக்கு சென்று விடுவார். வீட்டுக்கு திரும்பி வரும்போது மகன் தூங்கி விடுவான். ஒருநாள் மகன் தந்தை இடம் கேட்டான். அப்பா நீங்கள் அலுவலகத்துக்கு போனால் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? தந்தை ஒரு குறிப்பிட்ட தொகையை சொன்னார். மகன் சொன்னான் அந்த பணத்தை நான் எனது உண்டியலில் இருந்து எனது pocket money யிலிருந்து தந்து விடுகிறேன். இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் நீங்கள் இருங்கள் உங்களுடன் மனம் விட்டு பேச ஆசையாக இருக்கிறது என்றான். தந்தையின் விழியிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது மகனை ஆரத்தி தழுவிக் கொண்டார்.
இது கதையல்ல நிஜம் நமது எல்லோர் வாழ்விலும் நிலைத்து விட்ட ஒரு செய்தி. இந்த நிகழ்ச்சி நமக்கெல்லாம் அந்த செய்தியை நினைவு படுத்தியது.
கத்தர் காயல் நலமன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த வினாடி வினா போட்டி கலந்து கொண்டவர்களை மட்டும் உற்சாகப படுத்தவில்லை. பார்வையாளர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மதிப்பெண் வழங்கியவர்கள் இந்த வினாடி வினாவை கேட்ட கோவை சகோதரர்களையும் உற்சாகப் படுத்தியது.
எனது 65 வயதில் எனக்கு ஒரு புதிய செய்தி கிடைத்தது. COPYRIGHT நான் சாதாரணமாக கேள்விப் பட்ட ஒன்று. ஆனால் COPYLEFT இப்போதுதான் தெரிய வந்தது. அதற்கான அடையாளம் symbol அதுவும் இப்போதுதான் அறிவுக்கு தெரிந்தது. இன்னும் எவ்வளவோ......
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.
தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருக்கும்.
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross