செய்தி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம் இயற்றும் முயற்சியைக் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம்! சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்)[13 September 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44622
பொது சிவில் சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "தேசிய கல்விக் கொள்கை 2016" வரைவு அறிக்கையின் மீது போதுமான அளவு இல்லை.
இந்த அறிக்கை சமூகநீதியை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதென கல்வியாளர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அவசியமானது. இதுபோன்று பிற கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எந்த ஒரு அமைப்பையோ இயக்கத்தையோ சாராத தன்னிச்சையான சிந்தனைத் தளமான எழுத்து மேடை மையம் தமிழ் நாடு, தனது சமீபத்திய கல்வி-சார்ந்த நிகழ்வில், இதனை ஓர் விவாதப் பொருளாக எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அந்நிகழ்வு குறித்த அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை பற்றிய சமூகத்தில் நிலவும் சில விமர்சனங்களின் சுருக்கங்களும் பதிவிடப்பட்டுள்ளது. அதன் வலைதள முகவரி இதோ:
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross