புதிய கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த - மத்திய பாரதீய ஜனதா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கலந்துகொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் பொது சிவில் சட்டம் ஆகிய முயற்சிகளை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் 04-09-2016 மாலை 05:00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் தலைமை தாங்கினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இபராகிம் மக்கி, மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் ஜனாப் எஸ்.ஜெ,மஹ்மூதுல் ஹசன், மாவட்ட பொருளாளர் ஜனாப் திரேஸ்புரம் கே.மீராசா, தூத்துக்குடி மாநகர கெளரவத் தலைவர் ஜனாப் எம்.அப்துல் கனி, தாய்லாந்து காயிதே மில்லத் பேரவை தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.சம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஷ்ஹாப் அர்பாட்டத்தை நெரிப்படுத்தினார். வார்டு செயலாளர் அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார். துவக்கமாக முஸ்லிம் தொண்டு இயக்கம் தலைவர் பேராசிரியர் சே.மு.மு.முஹம்மது அலி கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ், ஏழாவது வார்டுத் தலைவர் என்.டி.முஹம்மது இஸ்மாயில், ஐந்தாவது வார்டு என்.டி.அஹமது சலாவுத்தீன் ஆகியோர் மதிய பா.ஜா.கா அரசு கொண்டுவர உள்ள புதிய கல்வி கொள்கைக்கும், பொது சிவில் சட்டத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்கள் முழங்கப்பட்டது.
நிறைவாக கே.ஏ.எம்.முகம்மது அபூபக்க எம்.எல்.ஏ. ஆர்பாட்ட உரையாற்றினார்:-
மோடி பிதமராக பொறுப்பேற்றது முதலே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கல்வியை காவி மயமாக்கும் அபாயகரமான் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு இறங்கியுள்ளது.
பிதிய கல்விக் கொள்கையால் மாநில சுயாட்சி முழுமையாக பாதிக்கப்படும். சிறுபான்மையின் கல்வி நிறுவன நடவடிக்கைகளில் மத்திய அரசின் கல்வித்துறை நேரடியாக குறுக்கிடும் நிலை உருவாகும். இத்திட்டத்திற்கு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை தவிர அணைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இல்லாவிட்டால் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி நாடு தழுவிய போராட்டங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில், முஸ்லிம் லீக் ஏரல் நகரச் செயலாளர் ஜனாப் பீர் முஹம்மது, ஆழ்வார் திருநகரி பொறுப்பாளர் ஆழ்வை மசூது, சாத்தான்குளம் நகரச் செயலாளர் ஜனாப் முஹம்மது இஸ்மாயில், வடக்கு ஆத்தூர் நகரத் தலைவர் ஜனாப் சாஹுல் ஹமீது மற்றும் காயல்பட்டணம் நகர பொருளாளர் ஜனாப் எம்.ஏ.முஹம்மது ஹஸன் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தினை மாவட்ட துணைச் செயலாளர் ஜனாப் பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான், பத்தாவது வார்டு மாவட்ட பிரநிதி எம்.ஹெச்.அப்துல் வாஹித், ஏழாவது வார்டுத் தலைவர் என்.டி.முஹம்மது இஸ்மாயில் புகாரி, ஆறாவது வார்டுத் தலைவர் ஜனாப் ஏ.கே.மஹ்மூது சுலைமான், பதினெட்டாவது வார்டு செயலாளர் எலக்ட்ரீஷன் எஸ்.ஹெச்.பஷீர் அஹமது, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சேக்முகம்மது ஆகியோர் ஒருகிணைத்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|