காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த மாணவர்கள் & இளைஞர்களது Independent Student Helping Association (ISHA) - Aroosiyya Group அமைப்பின் சார்பில், மருத்துவ பரிசோதனை இலவச முகாம், 04.09.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 08.00 மணி முதல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (தைக்கா பள்ளி) வளாகத்தில் நடைபெற்றது.
காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியின் முத்தவல்லி ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை தாங்கினார். எஸ்.எல்.எம்.முகைதீன், ஏ.பீ.மொகுதூம் முஹம்மத், கே.எம்.ஸாலிஹ், எஸ்.எம்.பி.மூஸா நெய்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஃப்ரீ தலைமையில், எம்.ஐ.மெஹர் அலீ, எம்.அஹ்மத் நெய்னா, செய்யித் அலீ உள்ளிட்ட மருந்தாளுநர்களும், மருத்துவ ஆய்வக பரிசோதகர்களும் இம்முகாமில் பங்கேற்று, பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த வகுப்பு கண்டறிதல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.
இம்முகாமில், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, மருத்துவ பரிசோதனை எடுத்துக்கொண்டனர். 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் உடனிருந்தனர்.
முகாம் ஏற்பாடுகளை, ISHA அமைப்பாளர் எம்.ஃபாஸில் ரஹீம், ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
‘ரிஃப்அத்’ உமர்
|