தமிழக அரசின், கோழிக்கோடு - காயல்பட்டினம் விரைவுப் பேருந்தில் காயல்பட்டினத்திற்கு இருக்கை ஒதுக்கீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்ற (மக்வா) பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.என்.மீரான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் 18ஆவது பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 02ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில், JAN COTTAGE நெய்னா காக்கா இல்ல மாடியில் நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் S.n.ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். செயலாளர் NM.அப்துல் காதர் துணைத் தலைவர் U.L.உதுமான் அப்துல் ராஷிக் துணைச் செயலாளர் ASIமுகம்மது சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தித் தொடர்பாளர் S.N. மீரான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். செயற்குழுஉறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களின் மகனார் S.M முஹம்மது இபுராஹிம் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் துணைச் செயலாளர் முகம்மது சிராஜ் - மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையுரையாற்றினார். மக்வாவின் செயல்பாடு மிகவும் அருமையாக உள்ளது எனவும்அனைத்து பொதுக்குழு நிகழ்ச்சியில் அதிகமான உறுப்பினர்கள் பங்கெடுத்து அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு இறைவனுடைய திருப் பொருத்தத்தை பெற்று மென்மேலும் நன்முறையில் செயல்பட அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் சேக் ஸலாஹுத்தின் சமர்பித்து மன்ற உறுப்பினர்கள் அதிகமானோர் மிக ஆர்வமாக தேடி வந்து சந்தா தொகை தருவதாக பெருமிதமாக எடுத்துரைத்தார். வரவு-செலவு கணக்கை ஏகமனதாக கூட்டம் அங்கீகரித்தது..
செயலர் உரை:
தொடர்ந்து, மன்றச் செயலாளர் N Mஅப்துல் காதர் உரையாற்றினார்.
மருத்துவ உதவி உட்பட - தேவையான நகர்நலப் பணிகள் அனைத்தையும், மக்வா இறையருளால் நிறைவாகச் செய்து வருவதாகக் கூறிய அவர், காயல்பட்டினம் - கோழிக்கோடு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து நமதூர் மக்கள் அதிகமாக உபயோகபடுத்துவதாகவும் அந்த பேருந்தில் காயல்பட்டினத்தில் இருந்து புறப்படும் போது நமக்கு 15சீட் கோட்டா உள்ளதாகவும் ஆனால் கோழிக்கோட்டில் இருந்து பேருந்து புறப்படும் போது அந்த கோட்டா முறை இல்லாமல் முழுவதும் ஆன்லைன் ரிசர்வேஷன் முறை கடைபிடிப்பதால் நமதூர் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுவதை கவனத்தில் கொண்டு நமக்கு 10 முதல் 15 இருக்கைகள் வரை கோட்டா பெற்று தரும் படி போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும், நம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நம் மண்ணின் மைந்தன் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அபூபக்கர் அவர்களுக்கும், தூத்துக்குடி விரைவு பேருந்து நிலைய மேலாளர் அவர்களுக்கும் நம் அமைப்பு சார்பாக கடிதம் அனுப்பபட்டதாக கூறினார்..
தேயிலை, ஆயத்தப் பணிகள்:
பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிகழ்விடத்தின் கீழ்ப்பகுதியில் உறுப்பினர்கள் தேயிலை மற்றும் பிஸ்கட், கேக் தயார் செய்வதற்கான பணிகள் பரபரப்போடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மழலை மொழி:
மன்ற உறுப்பினர் K.R.S. ரஃபீக் அவர்களுடைய அருமை மகனார் அப்துர் ரஹ்மான் தனக்குரிய மழலை மொழியில் இறைமறையை ஓதி அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.
ஷிஃபா செயல்பாடு குறித்த விளக்கம்:
செயற்குழு உறுப்பினர் உஸ்மான் - லிம் ரா அவர்கள் ஷிஃபாவின் செயல்பாடு குறித்த தெளிவான விளக்கவுரையாற்றினார்.
அதில் ஷிஃபாவின் செயற்குழு உறுப்பினராக தாமும் அதன் ட்ரஸ்டியாக செயற்குழு உறுப்பினர் S.M .மசூத் அவர்களும், மேலும் ஷிஃபா செயல்பாட்டிற்கு உறுதுணையாக நமதூரில் இருந்து நம் மன்றத்தின் செயல் வீரராக M. K.S.செய்யதுஅஹமது கபீர் அவர்களையும் நியமித்தது குறித்தும் விரிவாக பேசினார்..
கருத்து பரிமாற்றம்:
மிகவும் ஆரோக்யமான கருத்து பரிமாற்றத்தில் மக்வாவின் சார்பாக புதியதோர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் மக்வாவின் உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய மன்ற சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கு மன்ற பொதுக்குழுவிற்கு வர அனைத்து சவுகரியங்களும் இருக்கக் கூடியவர்கள் பொதுக்குழுவில் தங்கள் புரிதலை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடிதங்கள் மூலம் தெரியபடுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
கெளரவ ஆலோசகர் உரை:
மக்வாவின் கெளரவ ஆலோசகர்களில் ஒருவரான தலச்சேரி H. L.சாதிக் அவர்கள் மிக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்
நன்றியுரை:
செயற்குழு உறுப்பினர் M.Eசேட் மஹ்மூது நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
திரளான உறுப்பினர்கள்:
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகத்தினரும், துணைக்குழு பொறுப்பாளர்களும் விமரிசையாக செய்திருந்தனர்.
மஃரிப் தொழுகை:
கூட்ட இடைவெளியில், மஃகரிப்தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் K.R.S. ரஃபீக் அவர்கள் தொழுகையை வழிநடத்தினார்.
தேயிலை கேக் விருந்துபசரிப்பு:
பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கூட்டம், நிகழ்விடத்திலே தேயிலை கேக், பிஸ்கட்விருந்துபசரிப்பு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|