Re:...காவேரி பிரச்சினையும் கருணை நபிகளின் தீர்ப்பும் posted bymackie noohuthambi (kayalpatnam )[16 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44633
ஒரு பெண் கண்ணீரும் கம்பலையுமாக நின்று அழுதுகொண்டிருந்தாள் , ஏன் அழுகிறாய் என்று ஒரு பெரியவர் கேட்டார்..பிறந்த வீட்டிலும் எனக்கு நிம்மதி இல்லை. புகுந்த வீட்டிலும் எனக்கு நிம்மதி இல்லை என்று அவள் சொன்ன போது உன் பெயரென்னம்மா என்று அந்த பெரியவர் கேட்டார். என் பெயர் ''காவேரி'' என்று அவள் பதில் சொன்னாள். அதைக் கேட்டவுடன் அவர் சிரித்து விட்டார் நமது கர்நாடக தமிழ்நாடு நதிநீர் பிரச்சினை அவருக்கு ஞாபகம் வந்ததுதான் அவரது சிரிப்புக்கு காரணம்.
ஆனால் நேற்றைய இந்து நாளிதழில் ''பிரச்சினை காவேரி அல்ல'' என்ற ஒரு அருமையான கட்டுரை படித்தேன். 4 வது ஆண்டில் தடம் பதித்துள்ள ஹிந்து தமிழ் இதழுக்கு வாழ்த்துக்கள். உள்ளதை உள்ளபடி எழுதுவது உண்மைக்கு முதலிடம் கொடுப்பது என்ற சிறப்பான கொள்கையுடன் அது தனது சிறகை விரித்து பறக்கிறது.
இன்றைய குத்பா பிரசங்கத்தில் மொகுதூம் ஜும்மா பள்ளியின் கதீப் அவர்கள் நதிநீர் பிரச்சினை பற்றி பேசினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சினையை அவர்கள் எப்படி சமயோசிதமாக தீர்த்து வைத்தார்கள் என்பதை அருமையாக கோடிட்டுக் காட்டினார்கள்.
நமது ஊரில் கூட அடுத்தவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சி ஹராமாக அதை அனுபவிப்பவர்களை இறைவன் நாளை மறுமையில் அவர்களை திரும்பி பார்க்கவும் மாட்டான் அவர்களுடன் பேசவும் மாட்டான் என்று சொன்னபோது அந்த பாவத்தை செய்ப்பவர்கள் துடித்து போனார்கள்.
தனக்கு போக உபரியாக உள்ள நீரை தடை செய்ப்பவர்களுக்கு இறைவனின் சாபம் உண்டாகும். விளைவு மழை பெய்வது தடுத்து நிறுத்தப் படும். மலையில் உற்பத்தியாகி அருவியாக விழுந்து தரையில் உருண்டு திரிந்து பல ஊர்களுக்கூடாக சென்று எல்லா நிலங்களையும் விளை நிலங்களாக ஆக்கிக் கொண்டு அந்த நீர் கடலில் கலக்கிறது.
இது அல்லாஹ்வின் அருள் கொடை. அதை தடுத்து நிறுத்துவது பாவம் என்று சொன்னார்கள்.
மாநிலங்களாகட்டும் தனிப் பட்ட நகரங்கள் கிராமங்களாகட்டும் எல்லோருமே இந்த தண்ணீர் விஷயத்தை அல்லாஹ்வின் அருள்கொடை என்று நினைக்காமல் தங்கள் கெட்டி தனத்தால் இந்த மழை பொழிகிறது. இயற்கையாக அது அந்தந்த காலங்களில் பெய்துதான் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
விஷயம் அப்படியல்ல. பாவங்கள் அதிகமாக ஆக, பொய் புரட்டு அதிகமாக நாட்டில் உலவும்போது, இறைவனை மறந்து தான்தோன்றி தனமாக நடக்க மனிதன் தலைப்படுகின்ற காலங்களில் இப்படி மழை பொய்த்துவிடும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.
எனவே நாம் எல்லோரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்ற நமது எண்ணங்களை மாற்றி இறைவனிடம் நமது தண்ணீர் தேவைகளை கேட்போம். அவன் வானிலிருந்து மழையை பொழிய செய்வான். காவேரி அணைகளும் மற்றும் நாட்டின் எல்லா நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயிகள் நலமுடன் வாழ முடியும். இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.
வரப்புயர் நீர் உயரும்
நீர் உயர நெல்லுயரும்
நெல்லுயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்
என்ற பழ மொழி மீண்டும் துளிர்க்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross