உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, கர்நாடக அரசால் காவிரியாற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதைக் கண்டித்து, அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து, தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் சார்பில் இன்று (16.09.2016.) கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, காயல்பட்டினத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக, நகரில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
தகவல் & படங்களுள் உதவி:
S.N.முஹம்மத் அலீ
|