ஹாங்காங்கில் 12.09.2016. திங்கட்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் கவ்லூன் பெரிய பள்ளிவாசலில், காலை 07.00 மணிக்குத் துவங்கி, ஒரு மணி நேர இடைவெளிகளுக்கிடையே 3 விடுத்தங்களாக பெருநாள் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்படுவது வழமை. நடப்பாண்டும் 4 விடுத்தங்களாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. முதல் ஜமாஅத்தை பள்ளியின் துணை இமாம் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, இரண்டாவது ஜமாஅத்தை ஹாஃபிழ் முஹம்மத் நஈம், மூன்றாவது ஜமாஅத்தை - தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அர்ஷத், நான்காவது ஜமாஅத்தை காயல்பட்டினம் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் வழிநடத்தினர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், அங்குள்ள காயலர்கள் ஒன்றுகூடி கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதுடன், குழுப்படமும் எடுத்துக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 16:24 / 20.09.2016.]
[செய்தியில் தேதி திருத்தப்பட்டது @ 17:20 / 20.09.2016.] |