காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எல்.கனீ அவர்களின் மனைவி - காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெரு எல்.கே.காலனியைச் சேர்ந்த எல்.கே.எஸ்.எல்.ஜைனப், இன்று 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,
மர்ஹூம் எல்.கே.ஷெய்குனா லெப்பை அவர்களின் மகளும்,
‘காயலின் கல்வித் தந்தை’ என அனைவராலும் போற்றப்பட்ட மர்ஹூம் எல்.கே.லெப்பைத் தம்பி அவர்களின் மருமகளாரும்,
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எல்.கனீ அவர்களின் மனைவியும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின் தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை உடைய சகோதரியும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினரும், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான எல்.கே.லெப்பைத்தம்பியின் (தொடர்பு எண்: +91 98429 04747) தாயாரும்,
பொறியாளர் எஸ்.கனீ, மர்ஹூம் பத்ருத்தீன், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முன்னாள் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் அலீ ஃபாஸீயின் மனைவியின் தாயாரும்,
எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், ஷம்சுத்தீன் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (23.09.2016. வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ,
M.A.காழி அலாவுத்தீன் (TAS) &
A.S.புகாரீ
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 16:52 / 22.09.2016.]
[விரிவான தகவல் இணைக்கப்பட்டது @ 19:09 / 22.09.2016.] |