காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், ரேஷன் கடைகள் - மின் வாரியம் / மின் வினியோகம் - நகராட்சி சேவைகள் ஆகிய துறைகளின் சேவைக் குறைபாடுகள் தொடர்பான “பொதுமக்களின் புகார்கள் பெறும் முகாம்கள்” 25.09.2016. ஞாயிற்றுக்கிழமையன்று பின்வருமாறு நகரின் 20 இடங்களில் நடைபெறவுள்ளது:-
(01) ரிஸ்வான் சங்கம் (பை-பாஸ் சாலை)
(02) காயிதேமில்லத் நகர்நல அறக்கட்டளை (மஸ்ஜிதுத் தவ்பா)
(03) ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி அருகில் (பெரிய நெசவுத் தெரு)
(04) மங்களவாடி (கோயில் அருகில்)
(05) எல்.எஃப். வீதி (லேண்ட்மார்க் இல்லம் எதிரில்
(06) ரெட் ஸ்டார் சங்கம் (அப்பா பள்ளித் தெரு)
(07) ஐக்கிய சமாதானப் பேரவை அலுவலகம் அருகில் (கீழ நெய்னார் தெரு கலீஃபா அப்பா தைக்கா அருகில்)
(08) ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி (மகுதூம் தெரு)
(09) கோமான் தெரு ரேஷன் கடை அருகில்
(10) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ் நூலகம் (அலியார் தெரு)
(11) மஹ்பூப் ஸுப்ஹானீ சங்கம் (காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி)
(12) காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி அருகில் (காட்டு தைக்கா தெரு)
(13) முஹ்யித்தீன் தெரு (தஸ்தகீர் கறிக்கடை அருகில்)
(14) ஆஸாத் தெரு (3 மாடி வீடு அருகில்)
(15) பஞ்சாயத் வீதி சந்திப்பு (மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஹாஜியார் இல்லம் அருகில்)
(16) வாணியக்குடி தெரு
(17) முஹம்மத் டிராவல்ஸ் ஹஜ் & உம்றா (ஏ.கே.வளாகம், மெயின் ரோடு)
(18) இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) அருகில்
(19) ஓடக்கரை வடக்கு
(20) பூந்தோட்டம் மெயின் ரோடு
இந்த விபரங்களையும், பொதுமக்கள் தம் புகார்களை இலகுவாகப் பதிவு செய்ய வசதியாக புகார் படிவத்தையும் உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் இரு பக்க பிரசுரம் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நகரின் 5 ஜும்ஆ பள்ளிகளிலும் இப்பிரசுரத்தை வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பிரசுரத்தைப் பொதுமக்கள் பாதுகாத்து, தமது புகார்களை அதிலுள்ள புகார் படிவத்தில் பதிவு செய்து, அவரவர் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் ஒப்படைக்குமாறும், அப்புகார்கள் உரிய அதிகாரிகள் / துறைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தொடர் முயற்சிகள் மூம் உரிய தீர்வு காணப்படவுள்ளதாகவும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்
காயல்பட்டினம்.
|