Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:38:16 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18306
#KOTW18306
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 22, 2016
காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4238 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தாயிம்பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட மஜ்லிஸுல் கவ்து சங்கம் & சீதக்காதி நினைவு நூலகத்தின் தலைவரும், இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற அமைப்பாளரும், காயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ பகுதியின் மூத்த ஆசிரியரும், எழுத்தாளரும், ஓவிய ஆசிரியருமான - காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா, இன்று 17.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் வி.வி.அப்பாஸ் அவர்களின் மகனும்,

மர்ஹூம் மொகுதூம் நெய்னா அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் ஏ.ஷேகு அப்துல் காதிர், ஏ.முஹம்மத் ஃபாரூக் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (மெ.த.), மர்ஹூம் கே.டீ.எம்.ஷேக்னா லெப்பை, எஸ்.டி.கோஸ் முஹம்மத், தாயிம் பள்ளி பொருளாளர் கே.எம்.தவ்லத் ஆகியோரின் மச்சானும்,

எம்.எஸ்.எல்.கித்ர் அப்பாஸ், கே.எம்.தாவூத், டாக்டர் டி.கிஸார், கே.எம்.அப்பாஸ், கே.எம்.ஷபீர் அலீ, டி.ஃபைஸல், கே.எம்.ஸித்தீக், மர்ஹூம் டி.சாமு ரியாஸ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (23.09.2016. வெள்ளிக்கிழமை) 10.30 மணிக்கு தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

விரிவான விபரம் இதே செய்தியில் விரைவில்...

தகவல்:
K.M.தாவூத், D.ஃபைஸல் & M.W.ஹாமித் ரிஃபாய்


[விரிவான தகவல் இணைக்கப்பட்டது @ 21:10 / 22.09.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [22 September 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44661

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by ABUBACKER & FAMILY (DUBAI) [22 September 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44662

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [22 September 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44663

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... இன்னா லில்லாஹி
posted by MOHAMMED RAFEEK KM (CALICUT) [22 September 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 44666

எங்கள் ஜமாஅத் வாசி, எங்கள் தெருவாசி, நாங்கள் எல்லோரும் மிகவும் நேசித்த நம் அருமை ALS மாமா நம்மை பிரிந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தாயும்பள்ளி ஜமாஅத் வேலையாகட்டும், நூலக பணியாகட்டும், பொதுநல சேவையாகட்டும், உதவி கோரி பள்ளிக்கு வரும் கடிதங்களாகட்டும், எந்த ஒரு வேலையிலும் அவர்கள் காட்டும் ஆர்வம், ஈடுபாடு, உழைப்பு இதெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த உந்துதல் (ideal Inspiration).

அவர்களுடைய பேச்சில் இளமை, தன்னம்பிக்கை இதெல்லாம் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு நன்றாக தெரியும்.

அன்னாருடைய இழப்பு எங்கள் ஜமாஅத்திற்கு மட்டுமல்ல, நம் ஊர் மொத்ததிலும்தான்.

அவர்கள் மரணிப்பதற்கு சில மாதத்திற்க்கு முன் நான் அவர்களை என் பால்ய நண்பன் தாவூதுடன் அவர்கள் வீட்டில் வைத்து சந்தித்தபோது அந்த இயலாமையிலும் அவர்கள் சொன்ன வார்த்தை என்னை மெய்ச்சிலிர்க்க வைத்து விட்டது...

"தம்பி ரஃபீக்! நான் நல்ல சுகமாகி மீண்டும் பொதுச்சேவை செய்ய துஆ செய்மா!

சுப்ஹானல்லாஹ்! பொதுப்பணி என்பது அவர்கள் இரத்ததோடு கலந்தது.

வல்ல الله அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது செய்த நல்ல அமல்கள், மார்க்கத்திற்காக ஆற்றிய பணிகள், கல்விப்பணிகள், சொல்லில் அடங்கா பொதுநலச்சேவைகள், அவர்களுக்கு தெரிந்த ஓவியக்கலையை அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க காட்டிய ஆர்வம், ஈடுபாடு, இஹ்லாஸ் இது அனைத்தையும் வல்ல الله ஏற்று அவர்களுடைய கபருடைய வாழ்க்கையை பிரகாசமாக்கி , மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க்க பதியை கொடுப்பானாக! என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம். ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் உற்றார்கள், உறவினர்கள், மற்றும் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் صبر جميل என்ற அழகிய பொருமையை கொடுப்பானாக! ஆமீன்.

MOHAMMED RAFEEK&FAMILY/CALICUT.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [22 September 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44667

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...சேவையின் மறுபக்கம் சந்தோஷமா சங்கடமா?
posted by mackie noohuthambi (kayalpatnam ) [22 September 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44668

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சுகவீனமுற்றவர்களை உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற விஷயம் எவ்வளவு சத்தியமானது.

மாமா அவர்களை சந்தித்து விட்டு என் மகன் வந்து என்னிடம் சொன்னபோது இப்போது போவோம் அப்போது போவோம் என்று அலட்சியமாக இருந்து விட்டேனே என்று வருத்தமாக உள்ளது.

''சேவையின் மறுபக்கம் சந்தோஷமா சங்கடமா?'' என்று இந்த இணையத்தளத்தில் அவர்கள் பதிவு செய்திருக்கும் விஷயங்களை மீண்டும் படித்துப் பார்த்தாலே போதும் அவர்கள் நமது இளைஞர்களை வேலைக்கு சேர்த்து விட்டு ஆளாக்கிய சந்தோசமான செய்தியும் சில இளைஞர்களை வேலைக்கு சேர்த்து விட்டு அவர்கள் பட்ட சங்கடங்களையும் மிக நேர்த்தியாக வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். அதை பற்றி நான் அவர்களுடன் பேசினேன். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் இப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் உங்கள் உதவிகளுக்கு மத்தியில் அது ஒரு தூசிதான் என்றேன்.

என்ன என் கட்டுரைகளுக்கு உனது விமர்சனங்களை காணோமே. நான் உனது கமெண்ட்ஸ்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் என்பார்கள்.

அவர்கள் சீதக்காதி நினைவு நூலகத்தில் சம்பளமில்லாமல் பணியாற்றினார்கள். அந்த நாட்களில் சுமார் 100 புத்தகங்கள் அடங்கிய ஒரு brief case அவரிடம் ஒப்படைத்தேன். பெரியார், அண்ணா மற்றும் பலதரப்பட்ட இஸ்லாமிய நூல்கள் எல்லாம் அதில் இருந்தது.

''அப்போ, brief case ? என்று ஒரு கேள்வி எழுப்பினார்கள். அதுவும் நூலகத்துக்குத்தான் என்றேன். இன்றும் அவர்கள் அதை என் பெயரால் வரவு எழுதி வைத்த குறிப்பு அங்கு இருக்குமென நினைக்கிறேன்.

மாமா அவர்கள் மறைந்து விட்டார்கள் என்ற செய்தியை பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துள்ளவைகளை நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மர்ஹூம் அவர்களின் நல்ல செயல்களை அல்லாஹ் கபூல் செய்வானாக. அவர்களின் குறைகளை மன்னித்தருள்வானாக அவர்களின் மண்ணறையில் சுவர்க்க பூங்காவாக்கி வைப்பானாக . அவர்களுக்கு மேலான சுவர்க்க வளைவை நசீபாக்கி வைப்பானாக ஆமீன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக.

புரியாத பிரியம் பிரியும்போது புரியும்

மக்கி நூஹுத்தம்பி & குடும்பத்தினர்கள்

51 புதுக் கடை தெரு
காயல்பட்டினம்.
9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mohamed abdul kader (kayalpatnam) [22 September 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44669

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில் லாஹி வா இன்ன இலைஹி ராஜாஹூன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [22 September 2016]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44670

எனதன்புக்குறிய ALS மாமா என்று அன்போடு அழைக்கக்கூடிய லெப்பைசாகிபு காக்காவின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்! இன்னாலில் லாஹி வா இன்ன இலைஹி ராஜாஹூன்!

லெப்பை சாகிபு காக்காவை பொறுத்தவரை எவரிடமும் இனிமையாக பழக்கூடிய பச்சிளம் குழந்தையின் மனத்தைப்பெற்றவர்!.

எதிரில் இருப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமக்கு அறிமுகமாக இல்லாவிட்டாலும் ,பார்த்தவுடனேயே புண்சிரிப்பை சிந்தும் சிறப்புக்குறிய மாமனிதரை இழந்து விட்டோம்!

ஜமாத்து ,தெருவழி நமக்கு என்ன செய்தது என்று எண்ணாமல்,நாம் ஜமாத்திற்காக என்ன செய்தோம் என்ற ஒரு தொண்டுள்ளத்தின் அடிப்படையில்,தாயும்பள்ளி ஜமாத்தின் மேம்பாட்டிற்காக அள்ளும் பகலும் உழைத்த உத்தம மனிதர் இன்று நம்முடன் இல்லை!

சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பரிச்சியமானவர் மட்டுமல்ல ,அவர்கள் குடும்பத்தோடு உள்ளத்தூய்மையாக உறவாடி உரிமையோடு சென்று வந்தவன் நான்!

அப்படிப்பட்ட நெருக்கமுடிய ஒரு சகோதரரை நானும் என் குடும்பத்தாரும்,என் ஜமாத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் இழந்து நிற்கிறோம் என்று சொன்னால் அது நிதர்சனமே!

லெப்பை சாகிபு காக்கா அவர்கள் நமதூரிலுள்ள அனைத்து மழலை செல்வங்களோடு ஒன்றிணைந்து ,தங்களுடைய வயதைக்கூட எண்ணிப்பாராமல் தாமும் ஒரு தவழாத பிள்ளையாக மாறி பாசத்தை கொட்டி அப்பிஞ்சுள்ளங்களின் தேவையறிந்து அவர்களை அகமகிழ செய்வதோடு அவர்களின் அன்புள்ளத்தை வென்றெடுக்கும் வித்தக மனம் படைத்த உத்தமர்!

நேரு மாமா பிறந்த நாளை குழைந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்!.

என்னைப்பொறுத்தவரை, நம் காயல்பதியில் "ALS மாமா" அவர்களின் பிறந்த நாளை

"பிஞ்சுள்ளங்களின் பிரியமான நாள்" என்று பெயரிட்டு கொண்டாடினாலும் பொருத்தமாக இருக்கும் என ஆசைப்படுகிறேன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பிழைகளையும் பொறுத்து ,ஆக்கிரத்தில் "ஜன்னத்துல் பிர்தௌஸ்"என்ற நற்பதவியை வழங்கியருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவுத்துயரில் வாடி,வதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் குறிப்பாக என் ஆருயிர் நண்பன் பாரூக்குக்கும், அன்பு சகோதரர் டாகடர் கிஜார் அவர்களுக்கும் என் குடும்பத்தார்கள் அனைவர்களின் சார்பாக இரங்கலையும்,ஆழ்ந்த அனுதாபம் கலந்து ஆறுதலையும் ஸலாத்தினையும் தெரிவித்து கொள்கிறோம். அஸ்ஸலாமு அழைக்கவும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நெஞ்சம் கனகிறதே...
posted by M.N.L.Mohamed Rafeeq (Singapore) [22 September 2016]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 44671

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். செய்தியை முதலில் முகநூலில்தான் பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

முத்துச்சுடர் நற்சிந்தனை அல் ஹிதாயா போன்ற இதழகள் வெளிவந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எழுத்துப்பணியை துவங்கிய நான் ALS மாமாவின் நட்பு வட்டாரத்திற்குள் வந்தேன்.

அருமை நண்பர் காயல் ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருநாள் கடற்கரையில் வைத்து மாமா அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

நான் கேரளாவில் தொழில் செய்து கொண்டிருந்த காலம் நீங்கள்தான் கோணியூர் ரஃபீகா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். அன்று துவங்கிய நட்புறவு இன்று வரை நீடித்து வருகின்றது.

சந்திக்கும் பொழுதெல்லாம் நிறைய பேசுவோம். அவர்து கட்டுரைக்காக பல முறை நான் கேமிராவை தூக்கிக் கொண்டு அலைந்திருக்கின்றேன். வயது பேதமின்றி சம வயது நண்பரைப் போன்று பழகுவார். அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றிருக்கின்றேன்.

அவர்கள் வீட்டிற்கு நான் சென்றாலும் சரி எனது வீட்டிற்கு அவர்கள் வந்தாலும் சரி நேரம் போவதே தெரியாது.

உருவமில்லா ஓவியம், எழுத்து, புகைப்படம் என அனைத்திலும் நிறகுடமாய் வாழந்தவர். சிரார்களிடத்தில் அன்பும் நகைச்சுவை உணர்வும் மிகுந்தவர். தனக்கென்று சில கொள்கைகளை வகுத்து அதன்படியே வாழ்ந்தவர். இளைய சமுதாயத்தின் இன்றைய போக்கு குறித்து கவலைப்பட்டு அதற்காக கட்டுரைகள் பல எழுதி கருத்துக்களைச் சொன்னவர். அன்னாரின் பிரிவு என்போன்றோருக்கு பெருத்த இழப்பே.

எல்லாம் வல்ல நாயன் அவரது பிழைகளைப் பொருத்து அன்னாரது அமல்களுக்கு நற்கூலியையும், மண்ணறையில் விசாலத்தையும் வெளிச்சத்தையும் கொடுத்து மறுமையில் உயர்ந்த சுவனப்பதியை வழங்கியருள்வானாக அமீன். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

கனத்த மனதுடன்,
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [22 September 2016]
IP: 92.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44672

. எல்லோர்களாலும் பாசத்துடன் ஏ.எல்.எஸ்.மாமா என்று அழைக்கப்பெற்ற ஒரு பொதுநல தொண்டரை நாம் இழந்து விட்டோம் ...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அல்லாஹு அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , நல்லோர்களின் கூட்டத்தில் மர்ஹூம் அவர்களையும் இணைத்து வைப்பானாக . ஆமீன் ..

மேலும் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள் & உறவினர்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by D. Muhammad Shameem (Hong Kong) [23 September 2016]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 44675

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by CADER (JAIPUR) [23 September 2016]
IP: 27.*.*.* | Comment Reference Number: 44676

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சிலோன் பேன்சி காழி. (Mayiladuthurai.) [23 September 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44677

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

சிலோன் பேன்சி காழி,
மாயவரம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by kulam mohamed salih kks (seychelles) [23 September 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44679

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [23 September 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44681

CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.
May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.

Aameen!
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by netcom buhari (Chennai) [23 September 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44683

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. A Light Service
posted by Sheikh Abdul Qader (Riyadh) [23 September 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44685

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ALS = A Light Service ஒரு ஒளிச்சேவை என்று நாம் ஒருவிளக்கம் தரலாம் அதற்கு நமது ஏ எல் எஸ் மாமா அவர்கள் அழகிய ஒரு முன்னுதாரணம் அப்பாடிச்சொன்னால் அதுமிகையாகாது அவர்களுடைய தன்னலமற்ற சேவைமனபபான்மையானதும்அதில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடும் அதை நேர்த்தியாக செய்துமுடிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

கையைப்பிடித்து ஓவியம் கற்றுத்தந்து,இலக்கண இலக்கிய படைப்புகள் தருவதிலும் எதையும் எதிர்பாராத கருத்தாழமிக்க யோசனைகளுடன் தொடர் கட்டுரைகள்தருவதிலும் நமதூருக்கும்,சமூகத்திற்கும் சேவைசெய்தும்,பலருக்கும் வேலைவாய்ப்புகள் வாங்கித்தந்தும் தனது வாழ்நாளை வளமாக்கிக்கொண்டவர்கள் அவர்களின் இந்த அருமசேவைகளால் எத்தனையோவீடுகளில் அடுப்பெரிகிறது அது நிதர்சன உண்மை அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அதன்பிரதிபலனை மர்ஹூம் மாமா அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இருலோகத்திலும் கொடுத்தருள்வானாக ஆமீன்

எனக்கு ஒரு மனக்குறை அவர்களை சந்திக்கவேண்டுமென்று ஆசையிருந்தது அதுநடக்கவில்லை இறைவனின் நாட்டம் முயற்சிசெய்யவுமில்லை khair இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் நல்லடியார்களின் கூட்டத்துடன் நம்மையும் இணைத்து சுவனத்தில் கூடச்செய்வானாக ஆமீன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமல்களையும் ஏற்று அனைத்து பாவ,பிழைகளையும் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் அவனுடைய அழகுதரிசனத்துடன் நல்லாடியார்களுடன் சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [23 September 2016]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 44686

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [24 September 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44689

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [24 September 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44692

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي (அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்). أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم... ‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

ALS மாமா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மர்ஹூம் அவர்களை என் சிறு பிராயம் முதல் அறிவேன். அவர்களின் மருமக்களான கித்ரு அபபாஸ், தாவுத் நானா, அப்பாஸ் ரிஸ்வான், தம்பி பைசல் ஆகியோர் என் பால்ய நண்பர்கள். மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தின் அனைவரையும் நான் நன்கு அறிவேன்.

பேச்சில் நகைச்சுவையும், குணத்தில் கனிவும் நிரம்பவே பெற்றவர். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்ற முதுமொழியின் எடுத்துக்காட்டாக என்றுமே மகிழ்ச்சியாய் காட்சி தந்தவர். எல்லா பிள்ளைகளையும் தான் பெற்ற பிள்ளைகளாகவே கருதி அவர்களுக்குத் தேவையானவற்றை கற்றுக்கொடுத்து மனநிறைவு பெற்றவர்.

எங்களுக்கு திருமணப் பரிசாக கையடக்க குர்ஆன் ஷரீஃப் ஐ எங்கள் வீடுவந்து தந்து மகிழ்வித்தவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [24 September 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44694

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by nowshad (palani) [24 September 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44696

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

நௌஷாத் குடும்பத்தார்கள்
கருத்தம்பி மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by nowshad (palani) [24 September 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44697

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

நௌஷாத் குடும்பத்தார்கள்
கருத்தம்பி மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...நட்பு – நட்புக்கு ஏது பிரிவு
posted by AnbinalA (Jaipur) [24 September 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44702

நேசிப்போமா ALS மாமாவின்
எழுத்துக்களை சுவாசம் போல…

பூமியில் வாழ – நாம்
தருகின்ற வாடகை சேவை!
ஏன்ற மனம் கொண்டு
காயல் மக்களுக்கு
ஓவியத்தையும்,
எழுத்தையும் கருவாக, கண்ணாக
எப்போதுமே பிரசவித்து கொண்டிருந்தார்கள்…

புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்…

ஆனால்..!
நீங்கள் கொடுத்த - அந்த
புத்தகத்தின் வழியாக படித்த
நற்செய்திகாலம் உள்ளவரை
குட்டி போட்டுக் கொண்டிருக்கும்…

காயல்பட்டணத்தில்
நீங்கள் வாழ்ந்தாலும்
காயல்பட்டணமாகவே
வாழ்ந்தீர்கள்… வாழ்வீர்கள்…

பழகிய நெஞ்சம்
பிரிகின்ற நேரம் - அவர்
எண்ணமும், எழுத்தும்
எங்கள் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரம்…

ஓவியமும், கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
காகிதத்தில் மட்டுமல்ல
எங்கள் நெஞ்சத்திலும்…

கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
இதோ! புpரிவான நேரம்
உடலுக்கு மட்டுமே – நம்
நட்புக்கல்ல…

ALS இப்னு அப்பாஸ் மாமாவின்
மறுமை வாழ்வுக்கு நம்மனைவர்களும்
துஆச் செய்வோம்…ஆமீன்..!

- அன்பின் அலாவுதீன் -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சொல்ல நிறைய செய்திகள் உள்ளன!!!
posted by S.K.Salih (Kayalpatnam) [04 October 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44764

ஏ.எல்.எஸ். மாமாவின் மறைவு! அது ஏதோ பொய் சொன்னது போல என் மனது இன்னும் கூறிக்கொண்டே இருக்கிறது...

அவர்களுடன் எனக்குள்ள தொடர்பு குறித்து சொல்லவே எக்கச்சக்கமான தகவல்கள் உள்ளன. தனிக் கட்டுரையாக உடனேயே எழுத நாட்டமிருந்தும், என்னால் இயலவில்லை. அக்குறையை என் காக்காமார் சாளை பஷீர், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் ஆகியோர் நிறைவாகச் செய்துள்ளனர்.

இத்தனையையும் தாண்டியும் என்னிடம் சொல்ல நிறைய தகவல்கள் உள்ளன. இன்ஷாஅல்லாஹ் வாய்ப்பு கிடைத்தால் தனியொரு கட்டுரையாகத் தருகிறேன்...

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மனைவியார், மருமக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved