திருச்செந்தூர் வட்டாரத்தினர் சார்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா, காயல்பட்டினம் இரத்தினபுரி அங்கன்வாடி மையத்தில், 18.09.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இரத்தினபுரி பகுதி பிரமுகர் இளந்தளிர் முத்து முன்னிலை வகித்தார்.
குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் டீ.தங்க முனியம்மாள் அனைவரையும் வரவேற்றார். இரத்தினபுரி வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.பாக்கியஷீலா, இ.எம்.சாமி, ஆறுமுகநேரி பேரூராட்சி உறுப்பினர் செல்வி, சுய உதவிக்குழு தலைவி பெனிலா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில், திருச்செந்தூர் வட்டார கர்ப்பிணிப் பெண்களுக்கு ஐந்து வகை உணவுகள், மஞ்சள் குங்குமம், தேங்காய் - பழங்கள் நிறைந்த தாம்யூலத் தட்டு வழங்கப்பட்டது.
தகவல்:
பாப்பா
|