காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவினருள் ஒருவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த கத்தீப் ஏ.ஜெ.முஹம்மத் மீரா ஸாஹிப், இந்திய நேரப்படி 14.00 மணியளவில், ஹாங்காங்கில் காலமானார். அவருக்கு வயது 52.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரான அல்ஹாஜ் கத்தீப் ஏ.ஜெ.முஹம்மத் மீரா ஸாஹிப் அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி இன்று மதியம் ஹாங்காங்கில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையுற்றுள்ளோம்.
அன்னார். எமது பைத்துல்மால் அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து ஆற்றிய பணிகளும், வழங்கிய நல்ல பல ஆலோசனைகளும் ஏராளம். அவர்களின் மரணம், எமது அமைப்பிற்கும் - இந்த ஊருக்கும் பேரிழப்பு என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.
மர்ஹூம் அவர்களின் மறைவுக்கு எமது காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...
அன்னாரின் கேள்வி கணக்குகளை இலகுவாக்கி, உயர் சுவனத்தில் நபிமார் - இறைநேசர் – நல்லோருடன் இணைந்தமர அவர்களுக்கும், நம் யாவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயரத்தில் இருக்கும் அவர்களின் அன்புக் குடும்பத்தாருடன் இணைந்து நாங்களும் இத்துயரில் பங்குகொள்கிறோம். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு இத்துயரைத் தாங்கிடும் அளவுக்கு அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பாக...
தகவல்:
S.M.அஹ்மத் ஸுலைமான்
|