காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டத்தில், அவ்வமைப்பு 25 ஆண்டுகளைக் கடந்து செல்வதையொட்டி, வெள்ளி விழா மலர் வெளியிடவும், வெளியீட்டு விழா நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டம், 14.09.2016. புதன்கிழமையன்று 19.30 மணிக்கு, பைத்துல்மால் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் தலைவரும் - நடப்பு அறங்காவலருமான வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி, எஸ்.ஏ.ஜவாஹிர், பிரபு எம்.டீ.ஹபீப் முஹம்மத், எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், பாளையம் எம்.ஏ.ஹபீப் முஹம்மத், கே.எம்.ஸலீம், வி.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.ஏ.ஜெய்னுல் ஆப்தீன், ஏ.எச்.நெய்னா ஸாஹிப், எஸ்.ஏ.சி.முஹம்தம் ஷாஃபீ, எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், ‘ஜுவல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், குளம் அஹ்மத் முஹ்யித்தீன் (ஜித்தா), எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் (ஜித்தா), எம்.ஏ.கே.அப்துல் ஹஸீஃப் (ஜலாலிய்யா) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அண்மையில் காலமான அறங்காவலர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் மறைவுக்கு துவக்கமாக இரங்கல் தெரிவித்து துஆ இறைஞ்சப்பட்டது.
அமைப்பின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் கல்வி உதவித் திட்டத்தை, இன்னும் விரிவுபடுத்தி - கலை & அறிவியல் (Arts & Science) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களையும் இத்திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
(2) காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை 25 ஆண்டுகளைக் கடந்து செயல்படுவதையொட்டி, “வெள்ளி விழா” & “மலர் வெளியீட்டு விழா” நடத்த தீர்மானிக்கப்பட்டதுடன், விழாக்குழு அமைத்து செயல்படவும், இது தொடர்பாக எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம், எம்.ஏ.கே.ஹஸீம் ஆகியோரின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், வெள்ளி விழா & மலர்க் குழுவின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக ஜித்தா குளம் அஹ்மத் முஹ்யித்தீனை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அறங்காவலர் பாளையம் எம்.ஏ.ஹபீப் முஹம்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
S.M.அஹ்மத் சுலைமான்
|