இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள Nelum Pokuna எனும் பகுதியில், இலங்கை அரசு ஒருங்கிணைப்பில், அஷ்ரஃப் அல்குர்ஆன் ரிஸர்ச் அகடமி சார்பாக, 16.09.2016. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணிக்கு, “அழகிய தொனியில் அல்குர்ஆன்” எனும் தலைப்பில் - சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் ஓதல் (கிராஅத்) போட்டி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இப்போட்டியில், திருக்குர்ஆன் ஓதலில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டீ.ஹாஜியார் சிறப்பு நடுவராகக் (Adjudicator) கடமையாற்றினார்.
பன்னாட்டு காரீகளின் தலைசிறந்த பங்கேற்புடன் நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில், காயல்பட்டினம் ஏ.டீ.ஹாஜியார் - கிராஅத் சிறந்த நடுவர் தீர்ப்பாளர் (Best Adjuciator) என கண்ணியப்படுத்தப்பட்டார். இதற்காக, அவருக்கு விருதும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
போட்டியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், ஏராளமான காயலர்கள் உட்பட - பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
நிறைவில், கண்ணியம் பெற்ற ஏ.டீ.ஹாஜியார் உள்ளிட்ட பிரமுகர்களை காயலர்கள் கட்டித் தழுவிப் பாராட்டினர்.
இலங்கையிலிருந்து........
தகவல் & படங்கள்:
O.L.M.ஆரிஃப்
முஹம்மத் லெப்பை
S.I.ஹைதர் அலீ
|