காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்த - நெய்னார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப் அவர்களது மனைவி முஹம்மத் முஹ்யித்தீன் ஃபாத்திமா என்ற சின்னாத்தா, இன்று 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 63. அன்னார்,
அன்னார் மர்ஹூம் அ.க. முஹம்மத் உமர் ஸாஹிப் அவர்களின் மகன்வழிப் பேத்தியும்,
மர்ஹூம் மு.க.அ.ச.முஹம்மத் ஸுலைமான் அவர்களின் மகள்வழிப் பேத்தியும்,
மர்ஹூம் உ.ம.முஹம்மத் அனுஸுத்தீன் அவர்களின் மகளும்,
மர்ஹூம் எஸ்.ஏ.எல்.ருக்னுத்தீன் ஸாஹிப் அவர்களின் மருமகளாரும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முன்னாள் நிர்வாகி மர்ஹூம் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப் அவர்களின் மனைவியும்,
அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிபின் தாயாரும்,
மர்ஹூம் எம்.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எம்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எம்.எஸ்.முஹம்மத் ஹஸன் ஆகியோரின் சகோதரி மகளும்,
ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப் ஷஃரானீ என்பவரது தந்தையின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (28.09.2016. புதன்கிழமை) 08.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
S.E.முஹம்மத் நூஹ்
|