வரும் உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து உள்ளாட்சிப் பொறுப்பிடங்களிலும் 50 சதவிகிதம் பெண்கள் மட்டும் போட்டியிடும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காயல்பட்டினம் நகராட்சியில் 9 வார்டுகள் பெண்கள் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசு அறிவிப்பு வருமாறு:-
இந்த அறிவிப்பின் படி, 02, 03, 04, 05, 06, 08, 09, 14, 16 ஆகிய 9 வார்டுகள் பெண்கள் மட்டும் போட்டியிடும் வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், 14ஆவது வார்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டும் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 18 வார்டுகளைக் கொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத்தில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேற்படி வார்டுகளைத் தவிர்த்து, 01, 07, 10, 11, 12, 13, 15, 17, 18 ஆகிய 9 வார்டுகள் பொது வார்டுகளாகும். இந்த வார்டுகளில் இரு பாலரும் போட்டியிடலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிடமும் பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ள செய்தியை காயல்பட்டணம்.காம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. |