காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், ரேஷன் கடைகள் - மின் வாரியம் / மின் வினியோகம் - நகராட்சி சேவைகள் ஆகிய துறைகளின் சேவைக் குறைபாடுகள் தொடர்பான “பொதுமக்களின் புகார்கள் பெறும் முகாம்கள்” 25.09.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணி முதல் 13.00 மணி வரை - பின்வருமாறு நகரின் 19 இடங்களில் நடைபெற்றன:-
(01) ரிஸ்வான் சங்கம் (பை-பாஸ் சாலை)
(02) மஹ்பூப் சுப்ஹானீ சங்கம் (காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி)
(03) காயிதேமில்லத் நகர்நல அறக்கட்டளை (மஸ்ஜிதுத் தவ்பா)
(04) மங்களவாடி (கோயில் அருகில்)
(05) எல்.எஃப். வீதி (லேண்ட்மார்க் இல்லம் எதிரில்
(06) ரெட் ஸ்டார் சங்கம் (அப்பா பள்ளித் தெரு)
(07) ஐக்கிய சமாதானப் பேரவை அலுவலகம் அருகில் (கீழ நெய்னார் தெரு கலீஃபா அப்பா தைக்கா அருகில்)
(08) ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி (மகுதூம் தெரு)
(09) கோமான் தெரு ரேஷன் கடை அருகில்
(10) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ் நூலகம் (அலியார் தெரு)
(11) காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி அருகில் (காட்டு தைக்கா தெரு)
(12) முஹ்யித்தீன் தெரு (தஸ்தகீர் கறிக்கடை அருகில்)
(13) ஆஸாத் தெரு (3 மாடி வீடு அருகில்)
(14) வாணியக்குடி தெரு
(15) முஹம்மத் டிராவல்ஸ் ஹஜ் & உம்றா (ஏ.கே.வளாகம், மெயின் ரோடு)
(16) இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) அருகில்
(17) ஓடக்கரை வடக்கு
(18) பூந்தோட்டம் மெயின் ரோடு
(19) விசாலாட்சியம்மன் கோயில் தெரு
இம்முகாம்களில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினர்களும், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் - சமூக ஆர்வலர்களும் பொறுப்பாளர்களாகக் கடமையாற்றி, நியாயவிலைக் கடைகள், மின் வாரியம், நகராட்சி சேவைக் குறைபாடுகள் தொடர்பான - பொதுமக்களின் மனுக்களைப் பெற்றனர்.
பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், அந்தந்த துறைகளுக்கும், அவற்றின் அதிகாரிகளுக்கும் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டு, தொடர் நடடிவக்கை மூலம் தீர்வு காணப்படவுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்
காயல்பட்டினம்.
|